டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு திட்டங்களுக்கு அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அவை பின்வருபவை.. உணவு தானியங்களான (அரிசி, கோதுமை, பார்லி, மக்காச்சோளம் மற்றும் சோளம்), கரும்பு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு போன்றவற்றிலிருந்து, எத்தனால் உற்பத்திக்கான வடி திறனை மேம்படுத்துவதற்காக மாற்றியமைக்கப்பட்ட திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவில் 684 கோடி லிட்டர் எத்தனால் உற்பத்தி திறன் உள்ளது. 2019-20 சர்க்கரை ஆண்டில் எங்கள் எத்தனால் கொள்முதல் 38 […]