இன்று தமிழக சட்டப்பேரவை நடைபெற்று வருகிறது.அப்பொழுது ,என்பிஆர் தொடர்பான விவாதம் நடைபெற்று வந்தது.மேலும் பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற தமிழக அரசு மறுப்பு தெரிவித்தது.இந்நிலையில் என்பிஆர் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்த மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான தமிமுன் அன்சாரி தலைமைச் செயலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டார்.
டெல்லியில் வன்முறை பாதித்த பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள 18 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான நடந்த பேரணியில் ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலால் வடகிழக்கு டெல்லி கலவர பூமியாக மாறியது. இந்நிலையில் இது குறித்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், டெல்லியில் வன்முறை பாதித்த பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள 18 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிறப்பு குழுக்கள் மூலம் உதவிகள் வழங்க நடவடிக்கை […]
டெல்லியில் அமைதியை ஏற்படுத்த குடியரசுத் தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் மனு அளித்துள்ளனர். திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி ஆகியோர் கொடுக்கப்பட்ட மனுவில்,வன்முறையை தூண்டியவர்களுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்ய வேண்டும் என்றும் டெல்லி விவகாரத்தில் குடியரசுத்தலைவர் நேரடியாக தலையிட்டு அமைதி திரும்ப நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
டெல்லி வன்முறையால் இதுவரை42 பேர் உயிரிழந்துள்ளனர். டெல்லி வன்முறையால் பாதிக்கப்பட்ட மாவுஜ்பூர் பகுதியில் துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் நேரில் ஆய்வு செய்து வருகிறார். டெல்லி வன்முறையால் பாதிக்கப்பட்ட மாவுஜ்பூர் பகுதியில் துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் நேரில் ஆய்வு செய்து வருகிறார். மாவுஜ்பூர் பகுதியில் வசிக்கும் மக்களிடம் தற்போதைய நிலைமை குறித்து கேட்டறிந்தார் துணைநிலை ஆளுநர். நேற்று வட கிழக்கு டெல்லி பகுதியில் ஏற்பட்ட கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் […]
டெல்லியில் குடியுரிமை திருத்த சட்ட ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்களிடையே நடந்த மோதலில் 5 பேர் உயிரிழந்துள்ளனர், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மத்திய அரசால் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து பல்வேறு பகுதிகளில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் டெல்லியில் யமுனா விஹார் பகுதியில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் குடியுரிமை திருத்த சட்ட ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்களிடையே நடந்த மோதலில் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. மாவூஜ் புர் பகுதியில் […]
டெல்லியில் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் காவலர் ரத்தன்லால் உயிரிழந்துள்ளனர். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக டெல்லியில் யமுனா விஹார் பகுதியில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது.குடியுரிமை திருத்த சட்ட ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்களிடையே நடந்த மோதலில் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.நிலைமையை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள் இந்நிலையில் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் காவலர் ரத்தன்லால் உயிரிழந்துள்ளனர்.கோலாக்பூரி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார் ரத்தன்லால். டெல்லி வடகிழக்கு மாவட்டத்தில் 10 இடங்களில் 144 தடை உத்தரவு […]
இஸ்லாமிய அமைப்புகள் இன்று சட்டமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் பாதுகாப்புக்காக காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன் சென்னை வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமிய அமைப்பினர் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த போராட்டத்தை கலைக்க காவல்துறையினர் தடியடி நடத்தினர். இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது. இதற்கு இடையில்குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி இஸ்லாமிய அமைப்புகள் இன்று சட்டமன்றத்தை முற்றுகையிடும் போராட்டத்தை […]
நேற்று நடைபெற்ற போராட்டத்தில் ஏற்பட்ட தடியடி குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று திமுக எம்.பி.கனிமொழி தெரிவித்துள்ளார். சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக முஸ்லீம் அமைப்புகள் போராட்டத்தில் நடத்தியது.இந்த போராட்டத்தில் ,காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் மீது காவல்துறை தடியடி தாக்குதல் நடத்தினார்கள்.இந்த தாக்குதலை கண்டித்து தமிழகத்தில் உள்ள பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இது குறித்து திமுக எம்.பி.கனிமொழி தனது முகநூல் பக்கத்தில் பதிவு […]
சென்னையில் நடைபெற்ற தடியடியை கண்டித்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. நேற்று இரவு சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பொதுமக்கள் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்பொழுது,காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் மீது காவல்துறை தடியடி தாக்குதல் நடத்தி போராட்டத்தை கலைத்தனர். பின்பு காவல்த்துறையினர் 100-க்கும் மேற்பட்டோரை கைது செய்து ,பேச்சுவார்த்தைக்கு பின்னர் விடுவித்தனர். இதனை கண்டித்து தமிழகத்தில் உள்ள பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.குறிப்பாக […]
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக அமைதி வழியில் போராடிய மக்கள் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தி, பிப்.ரவரி 14 இரவை கறுப்பு இரவாக்கியுள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நேற்று இரவு சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பொதுமக்கள் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்பொழுது,காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் மீது காவல்துறை தடியடி தாக்குதல் நடத்தி போராட்டத்தை கலைத்தனர். பின்பு காவல்த்துறையினர் 100-க்கும் மேற்பட்டோரை கைது செய்து […]
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக ஷாகின் பாக் பகுதியில் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் அங்கு அடையாளம் தெரியாத நபர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட தகவலின்படி நபரின் பெயர் கபில் குஜ்ஜர் என்பது வெளியாகியுள்ளது .குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஷாகின் பாக் பகுதியில் போராட்டம் நடைபெற்று வந்தது .இந்நிலையில் மாலை 4.53 மணிக்கு அங்கு வந்த அந்த நபர் வானத்தை நோக்கி இருமுறை சுட்டுள்ளார் .துப்பாக்கியால் […]
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த சட்டதிருத்தத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு சார்பாக வழக்கு தாக்கல் செய்ய பட்டுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த சட்டதிருத்தை அமல்படுத்த மாட்டோம் என மேற்கு வங்கம், கேரளா உள்ளிட்ட சில மாநிலங்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்தன. தற்போது கேரள மாநில அரசு […]
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் விடுதி கட்டண உயர்வு மற்றும் குடியுரிமைசட்டத்திற்கு எதிராக கடந்த ஒரு மாத காலமாக போராட்டம் நடத்தி வருகின்றனர் முகமூடி கட்டிக் கொண்டு வந்து தாக்கிய கொடூர கும்பல் ஏபிவிபி தான் என்று ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் பேரவை குற்றம் சாட்டியுள்ளது டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் விடுதி கட்டண உயர்வு மற்றும் குடியுரிமைசட்டத்திற்கு எதிராக கடந்த ஒரு மாத காலமாக போராட்டம் நடத்தி வருகின்றனர் . கடந்த மாதத்தில் […]
பிரதமர் மோடியை ஒருமையில் பேசியதாக கூறி நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டு தற்போது நீதிமன்ற காவலில் உள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ட்வீட் செய்துள்ளார். நெல்லையில் நடைபெற்ற குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் பேச்சாளர் நெல்லை கண்ணன் பேசுகையில், பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை ஒருமையில் பேசியதாக அவர் மீது புகார் அளிக்கப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டார். தற்போது நெல்லை கண்ணன் நீதிமன்ற காவலில் […]
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் நெல்லை கண்ணன் பேசுகையில் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரை ஒருமையில் பேசியதால் அவர் மீது போலிசில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட கண்ணன், நெல்லை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். கடந்த ஞாயிற்று கிழமை, குடியுரிமை சட்டத்திற்கு எதிராக எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக நெல்லையில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற நெல்லை கண்ணன் பேசுகையில், பிரதமர் மோடியையும், மத்திய அமைச்சர் அமித்சாவையும் ஒருமையில் பேசியதாக அவர் மீது பாஜகவினர் போலீசில் புகார் […]
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பலவிதமாக போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்று மதுரையில் இஸ்லாமிய அமைப்புகள் மாபெரும் பேரணி நடத்தி தங்கள் எதிர்ப்பினை பதிவு செய்து வருகின்றனர். மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் குடிமக்கள் பதிவேடு சட்டத்திற்கும் எதிராக நாடு முழுவதும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த சட்டத்திற்கு எதிராக தமிழகத்திலும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்று மதுரையில் ஐக்கிய ஜமாத் மற்றும் இன்னும் சில […]
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பல இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. நேற்று திமுகவினர் கோலம் வரைந்து அதன் மூலம் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தினர். மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கும், குடிமக்கள் சட்டத்திற்கும் எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த சட்டத்திற்கு எதிராக தமிழகத்திலும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நேற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மறைந்த திமுக தலைவர் மு.கருணாநிதி மற்றும் பல திமுகவினர் தங்கள் வீட்டு […]
தேசிய குடியுரிமை திருத்த சட்டம், குடிமக்கள் பதிவேடு மசோதாவிற்கு எதிராக நேற்று சென்னையில் பெசன்ட் நகரில் பெண்கள் கோலம் போட்டு போராட்டம் நடத்தினர். தற்போது ஆழ்வார்பேட்டையில் உள்ள மு.க.ஸ்டாலின், கோபாலபுரத்தில் உள்ள மு.கருணாநிதி ஆகியோர் இல்லத்தில் கோலம் போட்டு வேண்டாம் CAA., NRC என எழுதப்பட்டுள்ளது. மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் குடிமக்கள் பதிவேடு மசோதா ஆகியவற்றை எதிர்த்து நாடு முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த போராட்டங்கள் வடமாநிலங்களில் தீவிரமாக […]
குடியுரிமை திருத்த சட்டம், குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் பெண்கள் கோலம் போட்டு போராட்டம் செய்தனர். இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 7 பெண்கள் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர். இதுகுறித்து திமுக எம்பி கனிமொழி டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்த சட்டம், குடிமக்கள் பதிவேடு சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நாடு முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த போராட்டம் தமிழகத்திலும் ஆங்காங்கே தொடர்ந்து நடைபெற்று வருகிறது. […]
குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் குடியுரிமை பதிவேடு முறைக்கும் எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஆலந்தூரில் பேரணி நடைபெற்றது. பேரணி நடத்தியதாக 10,000 பேர் மீது பரங்கிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தான்,வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து மத அடிப்படையிலான துன்புறுத்தல்களால் வெளியேறி,இந்தியாவில் தஞ்சமைடைந்த முஸ்லிம்கள் அல்லாத பிற சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கும் வகையில் மத்தியில் உள்ள பாஜக அரசு குடியுரிமை திருத்த மசோதாவை கொண்டுவந்தது.குடியுரிமை சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவை […]