கடந்த பிப்ரவரி மாதம் டெல்லியில் நடந்த குடியுரிமை எதிர்ப்புச் சட்ட எதிர்ப்புத் போராட்டத்தின் போது துப்பாக்கிச் சூடு நடத்திய கபில் குர்ஜார் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. குஜ்ஜார் கடந்த பிப்ரவரி 1- ம் தேதி குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (சிஏஏ) எதிர்ப்புத் தெரிவித்து ஆயிரக்கணக்கானோர் அமர்ந்திருந்த ஷாஹீன் பாக் பகுதிக்கு சென்று வானை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். பின்னர், பொலிஸ் நடத்திய விசாரணையின் போது, குர்ஜார் , அவரது தந்தை கஜே […]
டெல்லி கலவர வழக்கில் காவல்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் முக்கிய அரசியல் தலைவர் குர்ஷித் பெயர் இடம்பெற்றுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் வடகிழக்கு டெல்லியில் குடியுரிமை சட்ட ஆதரவாளர்களுக்கும், எதிர்பாளர்களுக்கும் இடையிலான வன்முறை மோதல்களில் 53 பேர் உயிரிழந்தனர். மேலும் 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கலவரத்தில் ஈடுபட்டவர்கள், கலவரத்தை தூண்டியவர்கள், ஆத்திரமூட்டும் வகையில் பேசியவர்கள் என ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டனர். இந்த வன்முறை தொடர்பாக விசாரணை நடத்தி வரும் டெல்லி காவல்துறை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. இதில், காங்கிரஸ் […]
உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த மருத்துவர் கபீல் கானுக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களில் வன்முறையை தூண்டும் விதத்தில் பேசியதற்காக தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கபீல் கானை கைது செய்து, கடந்த ஜனவரி 29 முதல் உத்தரபிரதேச மாநிலம் மதுரா சிறையில் அடைக்கப்பட்டார். இதனையடுத்து, கபீல் கானின் தாய் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம், தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்தது […]
சென்னை வண்ணாரப்பேட்டையில் 32 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இஸ்லாமியர்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அப்போது பேசிய ஸ்டாலின், சிஏஏ சட்டத்திற்கு எதிராக மாநிலங்களவையில் அதிமுக கூட்டணி எதிர்த்து வாக்களித்திருந்தால் இந்த சட்டம் வந்திருக்காது என்றும் இந்த சட்டத்திற்கு எதிராக தமிழக அரசு தீர்மானம் கொண்டு வர வாய்ப்பே இல்லை என்று தெரிவித்தார். மேலும் COVID-19 வைரஸ் அச்சுறுத்தல் அதிகரிப்பதால் CAA-வுக்கு எதிரான போராட்டத்தைத் தற்காலிகமாக ஒத்திவைக்குமாறு இஸ்லாமிய மக்களுக்கு ஸ்டாலின் […]
டெல்லியில் கலவரம் தொடர்பாக 167 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 885 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். டெல்லியின் வடகிழக்கு பகுதியில் சிஏஏ ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக வெடித்தது. இந்த கலவரத்தில் 42 பேர் பலியானதுடன், 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து போலீஸ் மற்றும் துணை ராணுவம் குவிக்கப்பட்டு, நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த நிலையில் வன்முறை தொடர்பாக 167 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 885 பேர் […]
வடகிழக்கு டெல்லியில் கலவரம் தொடர்பாக காவல்துறை 106 பேரை கைது செய்து, 18 எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான நடந்த பேரணியில், ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டு வடகிழக்கு டெல்லி கலவர பூமியாக மாறியுள்ளது. இந்த வன்முறையில் இதுவரை 34 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த நிலையில் கலவரம் தொடர்பாக டெல்லி காவல்துறை 106 பேரை கைது செய்து, 18 எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. […]
சென்னையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகள் நடத்திய போராட்டம் நிறைவுபெற்றுள்ளது . கடந்த சில தினங்களுக்கு முன் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமிய அமைப்பினர் ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த போராட்டத்தை கலைக்க காவல்துறையினர் தடியடி நடத்தினர். இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக இஸ்லாமிய அமைப்புகள் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி இன்று சட்டமன்றத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்துவதாக […]
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பாக பெறப்பட்ட கையெழுத்து படிவங்கள் டெல்லிக்கு அனுப்பப்பட்டது. கடந்த ஜனவரி 24 ஆம் தேதி குடியுரிமைத் திருத்தச் சட்டம் குறித்து திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி ஆலோசனை கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது .இந்த கூட்டத்தில் ,சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் உள்ளிட்டவற்றை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும்.தேசிய குடிமக்கள் பதிவேடு, மக்கள் தொகை பதிவேட்டை தமிழகத்தில் அனுமதிக்க கூடாது.குடியுரிமைத் திருத்தச் சட்டம், என்ஆர்சி, […]
இஸ்லாமிய மக்களுக்கு பிரச்சனை என்றால் நான் முதல் ஆளாக வந்து நிற்பேன் என்று தெரிவித்துள்ளார். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான தர்பார் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் ரஜினிகாந்த் காவல்துறை அதிகாரியாக நடித்திருந்தார். இவருக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்திருந்தார். இந்நிலையில் இவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில், குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பேசிய இவர், இஸ்லாமிய […]
டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக் கழகத்தில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கடந்த சில மாதங்களாக மாணவர்கள் போராட்டம் நடைபெற்றது. இதனிடையே நேற்று அவர்கள் சார்பாக மனித சங்கிலி போராட்டம் நடந்தது. இந்த நிலையில் ஜாமியா மிலியா பல்கலையில் நேற்று நள்ளிரவில் மீண்டும் துப்பாக்கி சூடு நடந்துள்ளது. அதில் இரண்டு மர்ம நபர்கள் பல்கலைக்கழக கேட் அருகே துப்பாக்கி சூடு நடத்தியதாக மாணவர்கள் புகார் அளித்துள்ளனர். டெல்லி ஜாமியா மில்லியா பல்கலைக் கழகத்தில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு […]