நாளை பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை நடைபெறவிருந்த சி.ஏ.தேர்வு தாள் – 1 தவிர்க்க முடியாத காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டதாக இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ஒத்திவைக்கப்பட்ட தேர்வு டிசம்பர் 13-ஆம் தேதி பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட்டில் மாற்றமும் இருக்காது, திட்டமிடப்பட்ட தேதிக்கு செல்லுபடியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டள்ளது.