Election2024 : அதிமுக வேட்பாளரை வெற்றிபெற செய்தால் கட்சி நிர்வாகிகளுக்கு பரிசு என முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார். மக்களவை தேர்தலில் கடந்த முறை போல அல்லாமல் இந்த முறை எப்படியாவது அதிக தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என்று அதிமுக தலைவர்கள் தீவிரமாக தேர்தல் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஒருபக்கம் தீவிர பிரச்சாரம் செய்து வந்தாலும், மறுப்பக்கம், கட்சி நிர்வாகிகள் சோர்ந்து விட கூடாது என அதிரடி அறிவிப்புகளும் அதிமுக சார்பில் வெளியாகி உள்ளது. அதிமுக சார்பில் […]
அதிமுக ஆட்சியின்போது சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த சி.விஜயபாஸ்கர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் கொடுக்கப்பட்டது. இந்த புகார் தொடர்பாக சி.விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா மீது கடந்த 2021-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. பின்னர்,லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் தலா 17,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை நகல்கள் நீதிமன்றத்தில் வழங்கப்பட்டு சி.விஜயபாஸ்கர் மற்றும் அவரது […]
பொங்கல் பரிசாக தமிழக அரசு அறிவித்துள்ள ரூ.2500-ஐ மக்கள் என்றும் மறக்கக்கூடாது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியது, சர்ச்சையை ஏற்படுத்தியது. பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், ஒவ்வொரு அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.2500 வழங்கப்படும் என்றும், அதனுடன் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு, திராட்சை, வெல்லம், முந்திரி, ஏலக்காய் உள்ளிட்ட பொருட்களும் வழங்கப்படும் எனவும், இந்த திட்டத்திற்காக ரூ.5,604 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் பழனிசாமி […]
தமிழகத்தில் கொரோனா தொற்று இன்னும் சமுகப்பரவலாக மாறவில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக நாள் ஒன்றுக்கு 5,800 முதல் 6,000 பேர் வரை பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதன்காரணமாக 4 ஆம் தளர்வுகளுடனான ஊரடங்கு அமலில் உள்ளது. மேலும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது. அந்தவகையில் இன்று கடலூரில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு செய்தார். […]
எஸ்.பி.பியின் உடல்நிலை குறித்து அவரது மகன் எஸ்.பி.பி.சரண் மற்றும் மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டறிந்தேன். அவர் விரைந்து குணமடைய விரும்புகிறேன். – அமைச்சர் விஜயபாஸ்கர் ட்வீட். திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், கொரோனா நோய் தொற்று காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் சென்னை சூளைமேட்டில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவரது உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. இந்நிலையில் தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ளார். அதில், ‘எஸ்.பி.பியின் உடல்நிலை […]
டிவி நடிகர் வரதராஜனை அழைத்து சென்று மருத்துவர், தூய்மை பணியாளர்களின் பணிகளை காட்ட தயார் என சுகாதாரத்துறை துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி. சென்னையில் கொரோனா சிகிச்சைக்காக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக டிவி நடிகர் மற்றும் பத்திரிகையாளரான வரதராஜன் குற்றம் சாற்றினார். இந்நிலையில், இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், டிவி நடிகர், பத்திரிகையாளரான வரதராஜன், அரசுக்கு எதிராக தவறான தகவலை […]
தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன்,கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வரும் நிலையில், நேற்று அவரின் உடல்நிலை கவலைக்கிடம் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. இதனையடுத்து, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அன்பழகனின் உடல்நலம் குறித்து நேரில் விசாரித்தார். தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. பொதுமக்கள் முதல் ஆளுநர் மாளிகை வரை சென்ற கொரோனா, தற்பொழுது எம்.எல்.ஏ-வயும் விட்டுவைக்கவில்லை. திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகனுக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியான நிலையில், அவர் தனிமைப்படுத்தப்பட்டு, குரோம்பேட்டையிலுள்ள […]
சீனாவிடம் தமிழக அரசு வாங்கியுள்ள 24,000 ரேபிட் கருவிகள் திருப்பி அனுப்பப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சீனாவை சேர்ந்த பையோ மெடிக்ஸ், வோன்ஃபோ ஆகிய நிறுவனங்களிடம் இருந்து வாங்கிய ரேபிட் டெஸ்ட் கருவியின் மூலம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட முடிவுகள் தவறாக வருகிறது என்று புகார் எழுந்தது. இதையெடுத்து, சீனாவில் இருந்து அனுப்பிய ரேபிட் டெஸ்ட் கருவிகளை பயன்படுத்த வேண்டாம் என இன்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மாநில அரசுகளுக்கு கூறியது. மேலும் […]
அடித்தட்டு மக்களுக்கு உதவியாக இருக்கும் திட்டங்களை செயல்படுத்துங்கள். ஐடி போன்ற பெரு நிறுவனங்களுக்கு ஊரடங்கு விதியை தளர்த்த வேண்டாம் என பார்த்திபன் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கோரிக்கை விடுத்துள்ளார். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. வரும் ஏப்ரல் 20ஆம் தேதி கட்டட தொழிலாளர்கள், பிளம்பிங், எலெக்ட்ரிக்கல், மெக்கானிக் வேலை செய்யபவர்கள் வேலைக்கு செல்லலாம் எனவும், குறிப்பிட்ட தொழிற்சாலைகள், கம்பெனிகள் பாதி ஆட்களை வைத்து இயக்கலாம் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு நடிகர் பார்த்திபன் […]
தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்கியிருப்பதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். டெல்லியிலிருந்து சென்னை வந்த நபருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதற்குமுன் தமிழகத்தில் காஞ்சிபுரத்தை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒருவருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 2ஆக உயர்ந்துள்ளது. #Coronaupdate: #RGGH, Chennai […]
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் தூத்துக்குடியில் ரூ.20 கோடி மதிப்பில் லீனியர் ஆக்சிலேட்டர் என்ற புற்றுநோய் மையம் அமைக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்த அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். தமிழக பட்ஜெட் தாக்களை தொடர்ந்து சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்றது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற 2வது தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் பல்வேறு திட்டங்களை முன்வைத்து ஆளும் கட்சியும், எதிர் கட்சியும் விவாதித்தனர். அப்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் புற்றுநோய் மையத்தை அமைக்க அரசு முன்வருமா? என திமுக உறுப்பினர் சுரேஷ்ராஜன் கேள்வி எழுப்பினார். இதற்கு […]
சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 2 சீனர்கள் உட்பட 4 பேருக்கும் கொரோனா வைரஸ் அறிகுறி இல்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சீனாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.சீனா மட்டும் அல்லாமல் உலகின் பல நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவி வருகிறது.இதனால் உலகின் பிற நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்த கொரோனா வைரஸ் தாக்கத்தினால் சீனாவில் நாளுக்கு நாள் உயிரிழப்பு அதிகரித்து கொண்டே வருகிறது.தற்போது வரை கொரோனா வைரஸ் தாக்கத்தால் 811 […]
போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களின் பணி முறிவு உத்தரவு திரும்பப் பெறப்படுகிறது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். அரசு மருத்துவர்கள் ஊதிய உயர்வு ,மருத்துவர் பணியிடங்களை குறைக்க கூடாது மற்றும் உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 7 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.பின்னர் முதலமைச்சர் மற்றும் அமைச்சரின் வேண்டுகோளை ஏற்று தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது. இந்த நிலையியில் போராட்டத்தை மருத்துவர்கள் வாபஸ் பெற்றதை அடுத்து அமைச்சர் விஜயபாஸ்கர் […]
மருத்துவர்கள் இன்றைக்குள் பணிக்கு திரும்பாவிட்டால் காலியிடமாக அறிவிக்கப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். அரசு மருத்துவர்கள் ஊதிய உயர்வு ,மருத்துவர் பணியிடங்களை குறைக்க கூடாது மற்றும் உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,மருத்துவர்கள் போராடுவதற்கு அரசு மருத்துவமனை போராட்ட களம் அல்ல .வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட 4,683 மருத்துவர்களில் 1,550 மருத்துவர்கள் பணிக்கு திரும்பி விட்டனர் […]
மருத்துவர்கள் நாளையும் பணிக்கு வராவிடில் பிரேக் இன் சர்வீஸ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். அரசு மருத்துவர்கள் போராட்டம் தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னையில் ஆலோசனை நடத்தினார் .இந்த ஆலோசனையில் சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ், சுகாதாரத்துறை இயக்குநர் குழந்தைசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதன் பின்னர் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில்,அரசு மருத்துவர்கள் தங்கள் போராட்டத்தை உடனே விலக்கிக்கொள்ள வேண்டும் .அரசு மருத்துவர்களின் போராட்டத்தால் நோயாளிகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது .எவ்வித முன்னறிவிப்பின்றி பொதுமக்களுக்கு […]
சுரங்கம் போன்ற குழி தோண்ட முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அடுத்தக்கட்ட மீட்பு நடவடிக்கை பற்றி சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். திருச்சியில் நடுகாட்டுபட்டி என்ற கிராமத்தில் நேற்று சுர்ஜித் என்ற2 வயது சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்தார்.ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை தொடர்ந்து மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அடுத்தக்கட்ட மீட்பு நடவடிக்கை பற்றி சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், குழந்தை விழுந்த ஆழ்துளை கிணறு அருகே என்எல்சி, தனியார் அமைப்பு இணைந்து போர்வெல் […]
சிறுவன் மூச்சுவிடுவதை கண்டறிய முடியவில்லை என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். திருச்சியில் நடுகாட்டுபட்டி என்ற கிராமத்தில் நேற்று சுர்ஜித் என்ற2 வயது சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்தார்.ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை தொடர்ந்து மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இது குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், அரசின் பல்வேறு துறைகள் ஒன்றிணைந்து தற்போது வரை சிறுவனை மீட்க போராடி வருகின்றனர். கண்காணிப்பு கேமரா மூலம் சிறுவனை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் […]
கொசு கடிப்பதற்கு முன் அது உள்ளாட்சித்துறை பணி, கொசு கடித்த பிறகு அது சுகாதாரத்துறை பணி என்று நான் கூறிய கருத்தில் தவறில்லை என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், மர்ம காய்ச்சல் என எதுவும் இல்லை. காய்ச்சலால் அனுமதிக்கப்படுபவர்களுக்கு ரத்த பரிசோதனை செய்து எந்த காய்ச்சல் என கண்டறிந்து அதற்கான சிகிச்சை அளிக்கப்படுகிறது. தமிழகத்தில் 210 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், இதுவரை டெங்குவால் யாரும் உயிரிழக்கவில்லை.டெங்கு […]
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் நடைபெற்றதற்கு தமிழக அரசு காரணமல்ல என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தேனி மருத்துவ கல்லூரியில் உதித் சூர்யா என்ற மாணவர் ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியதாக தெரிவிக்கப்பட்டது. பின் மருத்துவ கல்லூரியில் நீட் தேர்வெழுதி பயின்று வந்த உதித் சூர்யா என்பவரது நீட் தேர்வு நுழைவு சீட்டில் உள்ள புகைப்படமும், தற்போதைய புகைப்படமும் ஒன்றாக இல்லாத காரணத்தால் அவர் மீது சந்தேகம் எழுந்தது.இதன் பின்னர் அவர் மீது காவல் நிலையத்தில் புகார் […]
டெங்கு காய்ச்சலைக் கண்டு பொதுமக்கள் பயப்படத்தேவையில்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் காய்ச்சல் பிரிவு பிரத்யேக வார்டை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பார்வையிட்டார்.இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில்,டெங்கு காய்ச்சலைக் கண்டு பொதுமக்கள் பயப்படத்தேவையில்லை.காய்ச்சல் வந்தால் பொதுமக்கள் பயப்படாமல், உடனடியாக அரசு மருத்துவமனையை அணுக வேண்டும். டெங்குவை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது.ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 71 பேர் காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டதில் 9 பேருக்கு டெங்கு அறிகுறி […]