தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றவுள்ளது. இதனால், அனைத்து கட்சிகளும் கூட்டணி மற்றும் பிரச்சாரத்தில் முழு கவனம் செலுத்தி வருகிறது. இந்நிலையில், திருவல்லிக்கேணியில் பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி மற்றும் நடிகை குஷ்பு ஆகியோர் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சி.டி.ரவி, தமிழகத்தின் நண்பர் பிரதமர் மோடி மற்றும் பாஜக எனவும் தமிழகத்திற்கு எதிரி காங்கிரஸ் மற்றும் திமுக என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும். சகோதரி […]
பழனியில் பா.ஜ.க. மாநில தலைவர் எல்.முருகன், சி.டி.ரவி காவடி எடுத்தனர். தைப்பூசத்திருவிழாவை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்த பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் காவடி எடுத்தார். எல்.முருகனுடன் தமிழக பாஜக பொறுப்பாளர் சி.டி ரவி, மற்றும் அண்ணாமலை உள்ளிட்டோரும் காவடி எடுத்துச் சென்றனர். தமிழக அரசு தைப்பூசத்திற்கு விடுமுறை அளித்ததிற்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், வேல்யாத்திரை சிறப்பாக நடந்து முடிந்தற்காகவும் எல்.முருகன் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செய்தார்.
பாஜக மேலிட பொறுப்பாளர் ரவி மற்றும் மாநில தலைவர் எல்.முருகன் அவர்களும் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பின்னர், தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின் தொகுதி பங்கீடு பற்றி முடிவு எடுக்கப்படும் எனவும், தேர்தலுக்குப் பிறகு முதல்வர் வேட்பாளர் யார் என்பது பற்றி முடிவு எடுக்கப்படும் என பாஜக தேசிய பொதுச் செயலாளர் சி.டி ரவி தெரிவித்துள்ளார். Seat sharing will be finalized once the […]
தமிழகத் தேர்தல் தொடர்பாகப் பேசிய, பாஜக தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவி கர்நாடகாவை போல தமிழகத்திலும் பாஜக ஆட்சியமைக்கும் எனவும் வேளாண் சட்டம் அமலான பிறகும் கூட பல்வேறு மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது என தெரிவித்துள்ளார். சமீபத்தில் சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தினர். மேலும், அ.தி.மு.க உடன் பாஜக கூட்டணி தொடரும் என தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் தேர்தல் வர உள்ளது. இதற்காக அனைத்துக் கட்சிகளும் […]