6 மாநிலங்களில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நவம்பர் 3ஆம் தேதி நடைபெறும் என அறிவிப்பு. மகாராஷ்டிரா, பீகார், அரியானா, தெலுங்கனா, உத்தரபிரதேசம், ஒடிசா ஆகிய 6 மாநிலங்களில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கு நவம்பர் 3-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, அந்தேரி கிழக்கு (மகாராஷ்டிரா), மோகமா, கோபால்கஞ்ச் (பீகார்), ஆதம்பூர் (ஹரியானா), முனுகோட் (தெலுங்கானா), கோலா கோத்ரநாத் (உத்ரப்ரதேசம்) மற்றும் தாம்நகர் (ஒடிசா) ஆகிய சட்டப்பேரவை […]
இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் இடைதேர்தல் நடைபெற்று வருகிறது. அதன் படி விக்கிரவாண்டி, நாங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு நடைப்பெறும். இந்நிலையில் விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் எந்திரகோளாறால் ஒருமணி நேரமாக வாக்குப்பதிவு நிறுத்தபட்டு உள்ளது.235ஆவது எண் கொண்ட இந்த வாக்குச்சாவடியில் பழுதடைந்த இயந்திரத்தை சீரமைக்க அலுவலர்கள் முயற்சி செய்து வருகின்றனர்.
நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அமமுக போட்டியில்லை என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவை மற்றும் இடைத்தேர்தலில் திமுக அமோக வெற்றிபெற்றுள்ளது.பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தினகரனின் அமமுக கட்சி ஒரு இடங்களில் கூட வெற்றிபெறவில்லை. இதன் பின் தினகரனின் அமமுக பல்வேறு சறுக்கல்களை சந்தித்து வருகிறது. அதற்கு காரணம் அந்த கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அமமுகவை விட்டு விட்டு செல்கின்றனர்.மேலும் வேலூர் மக்களவை தேர்தலில் போட்டியிடவிடவில்லை என்று தினகரன் தெரிவித்தார்.நிலையான சின்னம் கிடைத்த […]
தமிழகத்தில் சூலூர், ஓட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தேர்தல் வாக்குப்பதிவு நிலவரம் தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில்,4 சட்டமன்ற இடைத்தேர்தலில் 1 மணி நிலவரப்படி சராசரியாக 47% வாக்குகள் பதிவாகியுள்ளது. சூலூர் – 48.04%, அரவக்குறிச்சி – 52.68 %, திருப்பரங்குன்றம் – 47.09% ஓட்டப்பிடாரம் – 45.06% வாக்குகள் பதிவாகியுள்ளது. மேலும் மறு வாக்குப்பதிவு நடைபெறும் […]
இன்று அரவக்குறிச்சி தொகுதியில் திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி வேட்புமனு தாக்கல் செய்தார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் செந்தில்பாலாஜி, அக்கழகத்தின் அமைப்பு செயலாளராக பதவி வகித்தார்.பின்னர் திமுகவில் இணைந்தார்.இதன் பின் கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளராக செந்தில் பாலாஜி நியமனம் செய்யப்பட்டார். அதேபோல் தமிழகத்தில் 18 தொகுதிகளுடன் சேர்த்து மீதமுள்ள நான்கு தொகுதிகளுக்கான இடைத் தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது.இந்த 4 தொகுதிகளில் மே 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனால் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக […]