புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற நிலையில் ஜான்குமார் பதவி ஏற்றுக்கொண்டார். புதுச்சேரியில் உள்ள காமராஜர் நகர் தொகுதியில் கடந்த 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.இதற்கு கடந்த 24-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.இதில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் அபார வெற்றிபெற்றார். இந்த நிலையில் இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற நிலையில் ஜான்குமார் பதவி ஏற்றுக்கொண்டார்.இவருக்கு சபாநாயகர் சிவக்கொழுந்து பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் நாங்குநேரி தொகுதியில் 33, 385 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருக்கிறார்.
தமிழகத்தில் கடந்த 21-ம் தேதி நாங்குநேரி , விக்கிரவாண்டி ஆகிய இரு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. அதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது. இந்த இரண்டு தொகுதி அதிமுக வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர். நாங்குநேரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் நாராயணன், காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை விட 2872 வாக்குகள் வித்தியாசத்தில் உள்ளார். அதேபோல விக்கிரவாண்டி தொகுதியில் திமுக வேட்பாளர் புகழேந்தியை விட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் […]
தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் கடந்த 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் ஆகிய இரு தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர். விக்கிரவாண்டி தொகுதி: அதிமுக -5312 திமுக -3265 நாம்தமிழர் -102 நாங்குநேரி தொகுதி: அதிமுக -6,300 காங்கிரஸ் -4,700 நாம்தமிழர் -0
புதுச்சேரியில் உள்ள காமராஜர் நகர் தொகுதியில் கடந்த 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தொகுதியில் உள்ள 35 ஆயிரத்து 9 வாக்காளர்களில் 24 ஆயிரத்து 296 பேர் வாக்களித்தனர். இதனால் 69.44 சதவீத வாக்கு பதிவானது. இந்நிலையில் இன்று காலை 8 மணிக்கு புதுச்சேரி காமராஜர் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டது. இந்த வாக்கு எண்ணிக்கை மூன்று சுற்றுகளாக எண்ணப்பட்டன. மூன்று சுற்றுகள் எண்ணப்பட்ட நிலையில் இறுதியாக காங்கிரஸ் வேட்பாளர் ஜான் குமார் 14,782வாக்குகளும் , என் […]
தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இன்று காலை 8 மணிக்கு தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. தபால் வாக்கு எண்ணிக்கை 8 மணி முதல் 8.30 வரை எண்ணப்படும். விக்கிரவாண்டியில் தபால் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகின்ற நிலையில் , விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வன் முன்னிலையில் உள்ளார். திமுக வேட்பாளர் புகழேந்தியை விட முத்தமிழ்செல்வன் முன்னிலையில் உள்ளார். நாங்குநேரி தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் […]
புதுச்சேரி மாநிலம் காமராஜர் நகர் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இன்று காலை 8 மணிக்கு தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.8 மணி முதல் 8.30 வரை தபால் வாக்குகள் எண்ணப்படும். இந்நிலையில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்ற நிலையில் என்.ஆர் காங்கிரஸ் வேட்பாளர் புவனேஸ்வரனை பின்னுக்குத்தள்ளி காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் முன்னிலை உள்ளார். காங்கிரஸ் -3919 வாக்குகள் என்.ஆர் காங்கிரஸ்- 2092 வாக்குகள் நாம் தமிழர் -0 வாக்குகள்
விக்கிரவாண்டி ,நாங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜர் நகரில் காலை 8 மணிக்கு தபால் வாக்குகளும் , பின்னர் 8.30 மணிக்கு எந்திரங்களில் பதிவான வாக்குகளும் எண்ணப்படும். விக்கிரவாண்டி , நாங்குநேரியில் 22 சுற்றுகளாகவும் , காமராஜர் நகரில் 3 சுற்றுகளாகவும் வாக்குகள் எண்ணப்படுகிறது. மூன்று தொகுதி வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் மகாராஷ்டிரா, ஹரியானா தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கையும் தொடங்கியது.
தமிழகம் மட்டுமன்றி இன்று மேற்குவங்கத்தில் ஒரு தொகுதி,உத்திரப்பிரதேசத்தில் ஒரு தொகுதி மற்றும் அருணாசலப்பிரதேசத்தில் இரு தொகுதிகளிலும் மொத்தம் இந்தியா முழுமைக்கும் சுமார் 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. தமிழகத்தின் ஆர்.கே.நகர் தேர்தலில் டி.டி.வி தினகரனும், மேற்கு வங்கத்தின் சபாங்கில் திரிணாமுல் காங்கிரஸ்யின் கீதா புனியா,அதே போன்று உத்தரபிரதேசம் மற்றும் அருணாச்சல பிரதேசத்தில் பாஜக வேட்பாளர்கள் முன்னிலை வகிக்கின்றனர்.