13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசதத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் ஆளும் கட்சிகளே முன்னிலையில் உள்ளனர். 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசமான தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி ஆகிய இடங்களில் மூன்று மக்களவை மற்றும் 29 சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல்களுக்கான வாக்குகளை தேர்தல் அதிகாரிகள் இன்று எண்ணத் தொடங்கினர். இந்த இடங்களுக்கு அக்டோபர் 30-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அஸ்ஸாமில் 5, மேற்கு வங்கத்தில் 4, மத்தியப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், மேகாலயாவில் தலா 3, […]