ராமேஸ்வரத்திலிருந்து, மீன்பிடிப்பதற்காக சென்ற மீனவர்கள், கச்சத்தீவு அருகே, இந்திய கடல் எல்லையில் மீன் பிடித்துக்கொண்டிந்தனர். அப்போது, 3 ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களின் படகுகளில் உள்ள மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்தியும், வலைகளை அறுத்தெரிந்தும், அட்டூழியத்தில் ஈடுபட்டனர். பின்னர், தமிழக மீனவர்களைத் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனால், சர்வதேச கடல் எல்லையில் தமிழக மீனவர்கள் தவித்து வருவதாக பாதிக்கப்பட்ட மீனவர் சுரேஷ், நியுஸ் 7 தமிழுக்கு தொலைபேசி வாயிலாகத் தெரிவித்தார். source: dinasuvadu.com