நாமக்கல்லில் காலை நிலவரப்படி இயக்க வேண்டிய 333 அரசுப்பேருந்துகளில் 192 பேருந்துகள் இயக்கப்படுகிறது.அதேபோல் சிவகங்கையில் காலை நிலவரப்படி இயக்க வேண்டிய 600 அரசுப்பேருந்துகளில் 200 பேருந்துகள் இயக்கப்படுகிறது. தென் மாவட்டமான நெல்லையில் காலை நிலவரப்படி இயக்க வேண்டிய 555 அரசுப்பேருந்துகளில் 222 பேருந்துகள் இயக்கப்படுகிறது. அதேபோல் வட மாவட்டங்களான திருவாரூர் மாவட்டத்தில் காலை நிலவரப்படி இயக்கவேண்டிய 239 அரசுப்பேருந்துகளில் 50 பேருந்துகள் இயக்கப்படுகிறது.அதே போல் அரியலூரில் காலை நிலவரப்படி இயக்க வேண்டிய 194 அரசுப்பேருந்துகளில் 31 பேருந்துகள் […]
நாமக்கல்லில் அரசு பேருந்துகளை இயக்க 200க்கும் மேற்பட்ட தினக்கூலி ஓட்டுநர், நடத்துநர்கள் நியமனமிக்கப்பட்டுள்ளனர்.ஆனால் நாமக்கல் பிரதான சாலை மற்றும் நகரங்களைத் தவிர கிராமப்புறங்களுக்கு அரசு பேருந்து சேவை இல்லை என மக்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் 434 அரசு பேருந்துகள் உள்ளது இதில் 84 பேருந்துகள் தற்காலிக ஓட்டுநர் மற்றும் நடத்துனரை கொண்டு சுமார் 20 சதவிகித பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகிறது. இதனால் போக்குவரத்து வசதியின்றி பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
தமிழகம் முழுவதும் உள்ள அரசு போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தின் ஒரு பகுதியாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 12 பணிமனைகளில் இருந்து இயக்கப்பட வேண்டிய 800க்கும் மேற்பட்ட பேருந்துகளில் சுமார் 100 பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன.போக்குவரத்து தொழிலாளர்களின் தொடர் போராட்டம் காரணமாக போக்குவரத்து வசதியின்றி பொதுமக்கள் அவதியடைதுள்ளனர். அரசு தொழிலாளர் கோரிக்கையை நிறைவேற்றுமா.???
போக்குவரத்து ஊழியர்களின் ஸ்டிரைக்கால் சென்னையில் குறைந்தளவு பேருந்துகளே இயக்கப்படுகிறது. திருவான்மியூரில் உள்ள மொத்தம் 106 பேருந்துகளில் வெறும் 39 பேருந்துகளும், தாம்பரத்தில் உள்ள 190 பேருந்துகளில் வெறும் 58 பேருந்துகளும், குரோம்பேட்டையிலிருந்து செல்லும் 200 பேருந்துகளில் வெறும் 45 பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர்,ஆகையால் தொழிலாளர்களின் கோரிக்கையை அரசு நிறைவேற்ற முன்வரவேண்டும் என பொதுமக்கள் தமிழக அரசை வேண்டுகின்றனர்.
ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி தமிழகம் முழுவதும் 3வது நாளாக போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.கடந்த 10 ஆண்டுகளாக போக்குவரத்து தொழிலாளர்கள் சம்பளத்தை அரசு உயர்த்தும் என நம்பினர். ஆனால் அரசு தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றவில்லை.இதனால் போக்குவரத்து தொழிலாளர்களின் தொடர் போராட்டம் காரணமாக போக்குவரத்து வசதியின்றி பொதுமக்கள் அவதியடைதுள்ளனர். அரசு தொழிலாளர் கோரிக்கையை நிறைவேற்றுமா…???