தொலைதூர பேரூந்துகளுக்கான கட்டண உயர்வு பட்டியல் தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் அறிவிப்பு. பெரம்பலூரில் செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், தொலைதூர பயண பேருந்து கட்டண உயர்வு பட்டியல் அதிகாரிகளால் தயார் செய்யப்பட்டுள்ளது. ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் அரசு பேருந்துகளில் உள்ள தொலைதூர பயண பேருந்து கட்டண விகிதத்தை ஆராய்ந்து, அதற்கு ஏற்ப பட்டியல் தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். மேலும், அரசு பேருந்து கட்டண உயர்வு குறித்து இதுவரை […]
பேருந்து கட்டண உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் திட்டமிட்டப்படி நாளை சாலை மறியல் போராட்டம் எதிர்க்கட்சிகள் கூட்டிய அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு. அனைத்து கட்சி கூட்டத்தில் பேருந்து கட்டண உயர்வு பற்றி விவாதிக்கபட்டது. நாளை போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும். அரசு முழுமையாக கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி கண்டன போராட்டத்தில் ஈடுபட உள்ளதென அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளனர்.
பேருந்து கட்டண உயர்வு மறுபரீசிலனை செய்யப்படும் என தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணத்தை தமிழக அரசு குறைத்தது.தமிழகத்தில் உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணத்தை குறைத்து தமிழக அரசு. சாதாரண பேருந்துகளில் கிலோ மீட்டருக்கு 60 பைசாவில் இருந்து 58 பைசாவாக குறைப்பு செய்துள்ளது. நகர மற்றும் மாநகர பேருந்துகளில் குறைந்தபட்சக் கட்டணம் ரூ.5 இல் இருந்து ரூ. 4 ஆக குறைக்கப்பட்டுள்ளது.