அரசு பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.தமிழக அரசு முன்னறிவிப்பின்றி அரசு பேருந்து கட்டண உயர்த்தப்பட்டதாகவும்,அரசின் இந்த முடிவால் தமிழக மக்கள் பெரிதளவு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வழக்கறிஞர் ஜார்ஜ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பேருந்துகளின் கட்டண உயர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் கடும் கோபத்தில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். பேருந்து கட்டணம் தமிழகம் முழுவதிலும் உள்ள மக்களை வெகுவாக பாதித்துள்ளது. இதன் காரணமாக பேருந்துகளில் பயணிப்பதற்கு பதிலாக மக்கள் அதிகமாக மின்சார ரயில்களை நோக்கி வர தொடங்கியிருக்கிறார்கள். இதனால் கூட்ட நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது. மேலும் திருவள்ளூர் மாவட்டம் ஒண்டிகுப்பத்தில் சென்னை-திருப்பதி சாலையில் பேருந்துகளை சிறைபிடித்து, மறியல் நடந்தது. போக்குவரத்து பாதிக்கப்பட்டதை அடுத்து, போலீசார் தடியடி நடத்தி, கூட்டத்தை கலைத்தனர். அதே போல் […]
கரூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், 2011ம் ஆண்டுக்கு பிறகு இப்போது தான் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாகவும், கடும் நிதி நெருக்கடியால் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளதாகவும் கூறினார். கட்டண உயர்வுக்கு பிறகும் ஆண்டுக்கு 950 கோடி ரூபாய் பற்றாக்குறை ஏற்படும் என்றும் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்தார்… இன்று முதல் தமிழகத்தில் அரசுப் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. 6 ஆண்டுகளுக்கு பின்னர் அதிகரிக்கப்பட்டுள்ள இந்த கட்டணம், நாளை முதல் அமலுக்கு வரும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. […]