தீபாவளியை முன்னிட்டு சென்னையில் போக்குவரத்து மாற்றங்கள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளன. தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 3 முதல் 5-ஆம் தேதி வரையில் சென்னையில் போக்குவரத்து மாற்றங்கள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளிக்குச் சொந்த ஊர் செல்பவர்களுக்கு ஏதுவாக தமிழக போக்குவரத்துத் துறை சிறப்புப் பேருந்து சேவையை கடந்த சின தினங்களுக்கு முன்பு அறிவித்தது. இந்நிலையில் சென்னை கோயம்பேட்டில் இருந்து தெற்கு மற்றும் மேற்கு மாவட்டங்களுக்குச் செல்லும் அரசுப் பேருந்துகள், மதுரவாயல் – தாம்பரம் – பெருங்களத்தூர் வழித்தடங்களைத் தவிர்த்துச் செல்லும். […]