அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட 6 கோரிக்கைகளை வலியுறுத்தி டிசம்பர் 19-ஆம் தேதி தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்த நோட்டீஸ் வழங்கினர். இதைத்தொடர்ந்து, போக்குவரத்து தொழிற்சங்கங்கள், அரசுடன் பேச்சுவார்த்தையை கடந்த டிசம்பர் 27 ஆம் தேதியும் , ஜனவரி 3 மற்றும் 5 ஆம் தேதியும் நடைபெற்றது. இந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் எட்டப்படாததால் திட்டமிட்டபடி போக்குவரத்து ஊழியர்கள் ஜனவரி 9, 10-ம் தேதிகளில் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு தடை […]
தமிழ்நாட்டில் போக்குவரத்துக்கு தொழிற்சங்கத்தினர் அறிவித்த வேலைநிறுத்த போராட்டத்துக்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் மூத்த வழக்கறிஞர் பி.ஆர். ராமன் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று காலை தலைமை நீதிபதி அமர்வில் நடைபெற்றது. அப்போது தலைமை நீதிபதி அமர்வு கூறியதாவது, வேலைநிறுத்ததால் அதிகம் பாதிக்கப்படுவது மக்கள் தான். போராட்டம் நடத்த உரிமை உள்ளது, ஆனால், பண்டிகை நேரத்தில் போராட்டம் நடத்துவது முறையற்றது. அரசும், போக்குவரத்துக்கு தொழிற்சங்கமும் ஏன் இந்த […]
தமிழ்நாடு முழுவதும் அரசு போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர். காலிப்பணியிடங்களை நிரப்புதல், பழைய ஓய்வூதியத் திட்டம், 15-வது ஊதிய ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி, போக்குவரத்து தொழிற்சங்கங்கள், அரசுடன் பேச்சுவார்த்தையை கடந்த டிசம்பர் 27 ஆம் தேதியும், ஜனவரி 3 ஆம் தேதியும் நடைபெற்றது. இந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் எட்டப்படாததால் ஜனவரி 9 ஆம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகப் போக்குவரத்து […]
தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், பல்வேறு இடங்களில் பணிமனை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள் கைது செய்யப்படும் வருகின்றனர். இந்த சூழலில் செய்தியாளர் சந்திப்பில் சி.ஐ.டி.யு மாநிலத் தலைவர் சவுந்தரராஜன் கூறியதாவது, தமிழக அரசிடம் இருந்து பேச்சுவார்த்தைக்கு எந்த அழைப்பும் வரவில்லை. அரசுப் பேருந்துகள் தற்காலிக ஓட்டுநர்களை கொண்டு இயக்கப்படுகிறது. அதாவது, முறையாக பயிற்சி பெறாதவர்களை வைத்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நிதிச்சுமை என்பதை காரணமாக சொல்ல முடியாது. தாங்கள் […]
ஊதியம், அகவிலைப்படி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பண்டிகை காலத்தில் வேலைநிறுத்த போராட்டத்தில் போக்குவரத்து ஊழியர்கள் ஈடுபட்டு வருவதால், பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். அதுமட்டுமில்லாமல், தமிழகம் முழுவதும் இன்று போக்குவரத்துக்கு கழக தொழிலாளர்கள் பணிமனை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் சென்னையில் பல்லவன் இல்லத்தை முற்றுகையிட்டு போக்குவரத்துக்கு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுபோன்று தமிழகம் முழுவதும் முற்றுகை போராட்டம் நடைபெறுவதால், போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சென்னை […]
தமிழ்நாடு முழுவதும் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் மூத்த வழக்கறிஞர் பி.ஆர். ராமன் மனுத் தாக்கல் செய்திருந்தார். பொங்கல் நெருங்கி வரும் நேரத்தில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் என கூறி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை இன்று காலை சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, […]
15வது ஊதிய ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டம், அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட 6 கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் நேற்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர். இன்றும் 2வது நாளாக இன்றும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும், பேருந்து நிலையங்கள் மற்றும் பணிமனைகளை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்போவதாகவும் அறிவித்துள்ளது. இதனால் பல்வேறு இடங்களில் வழக்கமாக இயங்கும் பேருந்துகளின் எண்ணிக்கை குறைந்ததால், பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகி உள்ளனர். இந்த […]
இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் போக்குவரத்து ஊழியர்கள், தொழிற்சங்க நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் உடன் 2-அம் கட்ட முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து வேலைநிறுத்த போராட்டத்தை போக்குவரத்து ஊழியர்கள் அறிவித்து இருந்தனர். இந்த பேச்சுவார்த்தையில் சிஐடியு, ஏஐடியுசி, அண்ணா தொழிற்சங்க பேரவை, ஐஎன்டியுசி, டிடிஎஸ்எஃப், பிஎம்எஸ் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர். தொழிற்சங்கங்கள் ஸ்டிரைக் அறிவித்துள்ளதை அடுத்து பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்குவது குறித்து அமைச்சர் சிவசங்கர் தலைமைச் […]
தமிழக போக்குவரத்து துறை ஊழியர்கள் 6 அம்ச கோரிக்கைளை முன்வைத்து நாளை (ஜனவரி 9ஆம் தேதி) முதல் வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்து இருந்தனர். ஏற்கனவே, கடந்த 3ஆம் தேதி போக்குவரத்து ஊழியர்கள், தொழிற்சங்க நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் உடன் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து வேலைநிறுத்த போராட்டத்தை போக்குவரத்து ஊழியர்கள் அறிவித்து இருந்தனர். இதனை தொடர்ந்து இன்று (ஜனவரி 8ஆம் தேதி) மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இந்த பேச்சுவார்தையானது சென்னை தேனாம்பேட்டையில் […]
தமிழகத்தில் இன்று காலை முதல் 60% பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாக தொமுச தெரிவித்துள்ளது. முக்கிய கோரிக்கைகள்: விலைவாசி உயர்வு,பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதையும், பெட்ரோலிய பொருட்கள் மீதான விலை உயர்வு உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் நேற்றும்,இன்றும் தொழிற்சங்கங்கள் பொது வேலை நிறுத்தத்தை அறிவித்தன.அதன்படி, நாடு முழுவதும் மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் 2 நாள் பொது வேலை நிறுத்தப் போராட்டம் நேற்று காலை முதல் நடைபெற்று வருகின்றது. மக்கள் […]
பேருந்து போக்குவரத்துக்கு சங்கங்கள் நடத்திய வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டதால், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து 100 சதவீத பேருந்துகள் இயக்கப்பட்டது. ஓய்வூதியப் பலன், ஊதிய உயர்வு, தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர பணி, உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி தமிழக அரசை போக்குவரத்து சங்கத்தினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இது தொடர்பாக கடந்த மாதம் போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சில அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டது. அந்த பேச்சுவார்த்தையில் எந்தவித உடன்பாடும் எட்டாத நிலையில், தங்களின் கோரிக்கைகளை […]
வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து தொழிலாளர்களை, தொழிலாளர் நல ஆணையம் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது. தமிழக அரசை போக்குவரத்து சங்கத்தினர், ஓய்வூதியப் பலன், ஊதிய உயர்வு, தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர பணி, உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி தொடர்ந்து வலியுறுத்தி, அரசு போக்குவரத்து ஊழியர்கள் 3-வது நாளாக தொடர்ந்து வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மிக,மிக குறைவான பேருந்துகள் மட்டுமே இயங்குவதால், மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில், வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து தொழிலாளர்களை, தொழிலாளர் நல […]
தமிழகம் முழுவதும் இந்த வேலைநிறுத்த போராட்டம் தொடங்கியுள்ள நிலையில், அரசு போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. தமிழக அரசை போக்குவரத்து சங்கத்தினர், ஓய்வூதியப் பலன், ஊதிய உயர்வு, தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர பணி, உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரிதொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தது. இந்நிலையில், இன்று பணிக்கு வராத போக்குவரத்து ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரித்து இருந்த நிலையில், அரசின் எச்சரிக்கையை மீறி, தமிழகம் முழுவதும் […]
சென்னை மாநகர போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. இன்று காலை முதல் ஜுன் மாத ஊதியம் இன்னமும் வழங்கப்படாததால் சென்னை மாநகர போக்குவரத்துக்கழக ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் பள்ளி மற்றும் அலுவலகங்களுக்கு செல்லும் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் கடும் அவதி அடைந்தனர். இதனையடுத்து சென்னை மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குநருடன் தொழிற்சங்க தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையொட்டி சென்னை மாநகர போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் வாபஸ் […]
நவம்பர் 1 ஆம் தேதி முதல் அரசு போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். கடந்த ஜனவரி மாதத்தில் ஊதிய உயர்வு, ஓய்வூதிய நிலுவைத் தொகை உள்ளிட்ட கோரிக்கையை வலியுத்தி தமிழக அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் பின்னர் சென்னை உயர்நீதிமன்றம் தலையிட்டது.இதன் விளைவாக ஸ்டிரைக் முடிவுக்கு வந்தது. இந்நிலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் தொழிலாளர்களிடம் அரசு பிடித்தம் செய்து நிலுவை வைத்துள்ள ரூ.7,000 கோடியை உடனே விடுவிக்க வேண்டும் […]
உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போக்குவரத்து ஊழியர்களின் வழக்கு விசாரணை பிற்பகலுக்கு ஒத்திவைத்த நிலையில் தற்போது தீர்ப்பு வெளியான பின்னரே அடுத்தகட்ட முடிவு என தெரிவித்துள்ளார் சௌந்தர்ராஜன். நீதிமன்றத்தின் தீர்ப்பை பொறுத்து அடுத்தகட்ட முடிவு எடுக்கப்படும் என்றும் தொழிற்சங்க சார்பில் உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது என்றும் சி.ஐ.டி.யு. தொழிற்சங்க தலைவர் சவுந்தரராஜன் பேட்டி அளித்துள்ளார். 2.44 மடங்கு ஊதிய உயர்வை இடைக்காலமாக ஏற்க தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் அரசிடம் ஆலோசித்து பிற்பகலில் […]
இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம் தொடர்பான வழக்கு இன்று மதியம் ஒத்திவைத்துள்ளது நீதிமன்றம் . போக்குவரத்துக் கழக தொழிற்சங்கம் வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.தொழிற்சாங்கத்தின் கோரிக்கையை ஏற்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து வழக்கு விசாரணையை உயர்நீதிமன்றம் பிற்பகலுக்கு ஒத்திவைத்துள்ளது.ஊதிய உயர்வு குறித்து ஓய்வு பெற்ற நீதிபதியை நியமித்து பேச்சு நடத்த தொழிற்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.போக்குவரத்து ஊழியர்கள் மீதான கிரீமினல் வழக்குகளை ரத்து செய்யவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. source: dinasuvadu.com
சென்னையில் கோயம்பேடு உள்ளிட்ட 5 பேருந்து நிலையங்களில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு 11, 12, 13 ஆகிய தேதிகளில் பொங்கல் சிறப்புப் பேருந்துகள் புறப்பட்டுச் செல்லும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக கோயம்பேடு உள்ளிட்ட இடங்களில் 29 சிறப்புக் கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டு முன்பதிவு நேற்று முன் தினம் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், போக்குவரத்து தொழிலாளர் போராட்டம் 8-வது நாளாக இன்று நீடித்து வரும் நிலையில், தற்போது வரை முன்பதிவுகள் நடைபெறாததால் சிறப்புக் கவுண்டர்கள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன. […]
ஊதிய உயர்வு போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் உள்ள அரசு போக்குவரத்து ஊழியர்கள் 8வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். இப்போராட்டத்தில் சி.ஐ.டி.யூ , தொ.மு.ச உட்பட 23 தொழிற்சங்கங்கள் ஒவ்வொரு கட்டமான போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.இதனைத்தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சாமியார்மடம் பகுதியில் தமிழக அரசு பேருந்து மீது அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் கல் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சம்பவத்தின் பின்னணி குறித்து மார்த்தாண்டம் போலீசார் விசாரணை செய்துவருகின்றனர்.
மத்திய அரசின் பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் தொழிற்சங்க ஊழியர்கள், போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர். வங்கி, மின்சாரத்துறை, எல்.ஐ.சி., துறைமுகம் உள்ளிட்ட பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு ஊழியர்கள் இதில் பங்கேற்கின்றனர். ஏ.ஐ.டி.யூ.சி., சி.ஐ.டி.யூ, உள்ளிட்ட 12 தொழிற்சங்கத்தினர் சேப்பாக்கத்தில் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். இதனிடையே, சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள தொழிலாளர் நல வாரியம் முன்பாக, போக்குவரத்துத் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். […]