Tag: Bus Services

பஸ் ஸ்டிரைக்: போக்குவரத்து ஊழியர்களுக்கு கடும் எச்சரிக்கை!

தமிழகம் முழுவதும் 6 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் 2ஆவது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் போக்குவரத்து சேவை முடங்கியுள்ளது. முதல் நாளான நேற்று, விடுப்பில் சென்றவர்கள், வாரவிடுமுறையில் இருந்தவர்கள், முன் அனுபவம் இல்லாதவர்களை வைத்து பேருந்தை இயக்கியதால், பெரிய பாதிப்பு எதுவும் இல்லை. ஆனால், இரண்டாம் நாளான இன்று தலைகீழாக மாறி, பேருந்து சேவை பல் இடங்களில் முடங்கியுள்ளது. இந்நிலையில், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் போக்குவரத்து ஊழியர்கள் பணிமனையை முற்றுகையிடவோ, பேருந்துகளை […]

Bus Services 3 Min Read
tn bus

தமிழகம் முழுவதும் 97.7% பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவிப்பு!

ஊதியம், அகவிலைப்படி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் 97.7 சதவீத பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. அதன்படி, சென்னையில் மாநகர பேருந்து 97.68 சதவீதம் இயக்கப்படுகின்றன. விழுப்புரம் பணிமனைகளில் இருந்து 1779 பேருந்துகளில் 1763 பேருந்துகள் இயக்கப்படுவதாகவும், சேலம் பணிமனைகளில் இருந்து 794 பேருந்துகளில் 775 பேருந்துகள் இயக்கப்படுவதாகவும், கோவை பணிமனைகளில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 1870 பேருந்துகளில் 1787 பேருந்துகள் இயக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2வது […]

Bus Services 4 Min Read
tn bus

2வது நாளாக வேலை நிறுத்தம்…! 30% போக்குவரத்து தொழிலாளர்களுக்கு மெமோ வழங்க நடவடிக்கை!

15வது ஊதிய ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டம், அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட 6 கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்தனர். இந்த சூழலில், போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் அமைச்சர் சிவசங்கர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், சுமுக முடிவு எட்டப்படவில்லை. இதனால், போக்குவரத்து தொழிற்சங்கங்கள் திட்டமிட்டபடி நேற்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர். இதனால் பல்வேறு இடங்களில் […]

Bus Services 6 Min Read
tn transport strike

போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் பேருந்துகளை மறித்தால் நடவடிக்கை – அமைச்சர் சிவசங்கர்

தமிழகத்தில் போக்குவரத்து தொழிற்சங்கங்கள், ஊதியம், காலிப்பணியிடங்களை நிரப்புதல், அகவிலைப்படி உயர்வு வழங்குதல் உள்ளிட்ட 6 முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், தமிழக முழுவதும் பல்வேறு பகுதிகளில் வழக்கமாக இயங்கும் பேருந்துகளின் எண்ணிக்கை குறைந்ததால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். கோரிக்கைகள் தொடர்பாக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியும் சுமுக முடிவு எட்டப்படவில்லை என்பதால், திட்டமிட்டபடி இன்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் போக்குவரத்துக்கு தொழிற்சங்கங்கள். இதன் காரணமாக பல இடங்களில் அரசு போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. […]

Bus Services 5 Min Read
Minister Sivashankar

அரசு பேருந்துகள் இயக்கம்… மண்டல வாரியான விவரத்தை வெளியிட்டது போக்குவரத்துத்துறை!

தமிழ்நாடு முழுவதும் அரசு போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர். ஊதியம், காலிப்பணியிடங்களை நிரப்புதல், ஓய்வூதிய பண பலன்களை வழங்குதல், அகவிலைப்படி உயர்வை வழங்குதல் உள்ளிட்ட 6 கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி, போக்குவரத்து தொழிற்சங்கங்கள், அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியும் தோல்வியில் முடிந்த நிலையில், திட்டமிட்டபடி இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பல்வேறு பகுதிகளில் பேருந்துகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதால் பொதுமக்கள் அவதியில் உள்ளனர். இந்த வேலைநிறுத்த போராட்டம் காரணமாக தமிழகம் முழுவதும் பேருந்து சேவை பெருமளவு பாதிக்கப்படும் […]

Bus Services 7 Min Read
tn transport