மத்தியஸ்தராக நியமிக்கப்பட்ட நீதிபதி பத்மநாபன் போக்குவரத்து தொழிலாளர் பிரச்சனை தொடர்பாக வருகின்ற 9ஆம் தேதி தனது விசாரணையை மேற்கொள்கிறார். போக்குவரத்து தொழிலாளர்கள் ஊதிய உயர்வு மற்றும் ஓய்வூதியம் குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது, இந்தப் பிரச்சனைக்கு தீர்வுகாண ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன் விசாரிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்நிலையில், வருகிற 9ம் தேதி மாலை 4 மணிக்கு சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள அண்ணா மேலாண்மை பயிற்சி நிலைய பேரிடர் நிர்வாக கூட்டரங்கில் நீதிபதி […]