மும்பை: மும்பையின் குர்லா பகுதியில் அதிவேகமாக வந்த பெஸ்ட் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து அருகில் நின்று கொண்டிருந்த பல வாகனங்கள் மீது மோதியது. தகவலின்படி, குர்லாவில் இருந்து அந்தேரி நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்து அம்பேத்கர் நகரில் உள்ள புத்தர் காலனி அருகே கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. நேற்று (திங்கள்கிழமை) இரவு 10.45 மணியளவில் இந்த விபத்து நடந்த இருப்பது தெரிய வந்துள்ளது. விபத்தையடுத்து, அந்த இடத்தில் ஏராளமானோர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்தில், நான்கு […]
ராஜஸ்தானிலுள்ள ராஜ்சமந்த் எனும் பகுதியில் தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்ததுள்ளது. அப்போது திடீரென்று பேருந்து பாறை ஒன்றின் மீது மோதியதில் 13 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 24 பேர் காயமடைந்துள்ளனர். இந்தப் பேருந்து உதய்ப்பூரிலிருந்து ஜோத்பூர் நோக்கி சென்று கொண்டிருந்த போது தான் விபத்து ஏற்பட்டதாகவும், பேருந்து ஓட்டுநர் தூங்கிக்கொண்டிருந்த போது ஓட்டியதால், பாறை மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளாகி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இதுதொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு […]
ஆந்திராவில் ஆற்றில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளாக்கியதில் 9 பேர் பலியாகியுள்ளனர். ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள மேற்கு கோதாவரி பகுதியில் அரசு பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. ஏலூர் அருகேயுள்ள பாலத்தைக் கடந்த பொழுது, பேருந்து கவிழ்ந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த விபத்தில் 5 பெண்கள் உள்பட 9 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
மஹாராஷ்டிராவில் பள்ளத்தாக்கில் பஸ் விழுந்ததால், சம்பவ இடத்திலேயே 5பேர் பலியாகியுள்ளனர். மகராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பஸ் ஒன்று மல்காபூரிலிருந்து சூரத்துக்கு ஏறக்குறைய 50 பயணிகளுடன் சென்றுள்ளது. சென்று கொண்டிருந்த வழியில்நந்தூர்பார் எனும் இடத்திலிருந்த ஒரு பள்ளத்தாக்கில் எதிர்பாராதவிதமாக பஸ் கவிழ்ந்து விழுந்துள்ளது. இந்நிலையில் சம்பவ இடத்திலேயே பேருந்தில் இருந்த ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த 5 பேரில் பயணிகள் மூவர்தான், பஸ் டிரைவர் கிளீனர் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் பேருந்தில் இருந்த பயணிகள் 34 […]
இன்று அதிகாலையில் ஒரு பேருந்து கான்பூரிலிருந்து டெல்லிக்கு சுமார் 45 பயணிகள் ஏற்றி கொண்டு சென்று கொண்டு இருந்தபோது, உத்தரபிரதேசத்தின் அலிகார் மாவட்டத்தின் தப்பல் பகுதியில் சென்றபோது அந்த பேருந்து கவிழ்ந்தது. பேருந்து கவிழ்ந்ததில் மூன்று பேர் உயிரிழந்தனர் மற்றும் 5 பேர் காயமடைந்தனர் என்று போலீசார் தெரிவித்தனர். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் வருத்தம் தெரிவித்துள்ளார். விபத்தில் காயமடைந்தவர்களுக்கு முறையான மருத்துவ சிகிச்சையை […]