ராய்ப்பூரில் உள்ள கன்குல் ஸ்டீலில் காற்று நிரப்பும் பொழுது புல்டோஸரின் டயர் வெடித்ததில் இருவர் உயிரிழந்துள்ளனர். சில்தாரா காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் இரு இளைஞர்கள் புல்டோஸரின் தாயாருக்கு காற்று நிரப்பியுள்ளனர். திடீரென அந்த தயார் வெடித்ததில் இருவரும் காற்றில் தூக்கி வீசப்பட்டதுடன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்துமுள்ளனர். உயிரிழந்தவர்கள் இருவரும் ராஜ்பால் சிங் மற்றும் பிரஞ்சன் நாம்தேவ் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர்கள் மத்திய பிரேஷின் சாத்யாவில் வசிப்பவர்கள் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளது.