மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்கான மாத ஊதியம் உயர்த்தப்படும் என தெரிவித்துள்ளார். மக்களவையில் மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்த அருண் ஜேட்லி, குடியரசுத் தலைவருக்கான மாத ஊதியம் 5 லட்ச ரூபாயாகவும், குடியரசுத் துணைத் தலைவருக்கான மாத ஊதியம் 4 லட்ச ரூபாயாகவும் உயர்த்தப்படும் எனத் தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியத்தை உயர்த்தவும் அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார். பணவீக்கத்துக்குத் தக்கபடி நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியத்தை ஐந்தாண்டுகளுக்கு […]
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் கட்ட அமர்வானது வரும் ஜனவரி 29ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி மாதம் 9ஆம் தேதி முடிகிறது. கூட்டத்தொடரின் முதல் நாளில் பொருளாதார ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்படும். பின், பிப்ரவரி 1ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்நிலையில் 2018-19ஆம் நிதி ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் சுகாதாரத் துறையில் அதிகமான அறிவிப்புகளைக் கொண்டிருக்கும் என்று தகவல் தற்போது வெளியாகியுள்ளது. சுகாதாரத் துறையில் குறிப்பாக, ஆரம்ப சுகாதாரத்திற்கு முதல் முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளது என்றும் சுகாதாரத்துறைக்கான […]
ஒவ்வொரு ஆண்டும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரானது ஜனவரி மாத இறுதியில் துவங்கி ஏப்ரல் மாத துவக்கத்தில் முடிவடையும். இந்நிலையில் இந்த 2018-19ம் ஆண்டிற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 29 முதல் ஏப்ரல் 6ம் தேதி வரை நடைபெறும் என மத்திய அரசு ஏற்கனவே அறிவிப்பு செய்திருந்தது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதி ஜனவரி 29 முதல் பிப்ரவரி 9ம் தேதி வரையிலும், இரண்டாம் பகுதி மார்ச் 5ம் தேதி முதல் ஏப்ரல் 6ம் தேதி வரையிலும் […]