மத்திய பட்ஜெட் விவசாயிகளுக்கு ஆதரவாக உள்ளது. ஆனால் நடுத்தர மக்களுக்கு பாராமுகமாக உள்ளது” என கமல்ஹாசன் கூறியுள்ளார். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பிப்ரவரி 10-ம் தேதி உரையாற்றுவதற்காக அமெரிக்கா கிளம்பிய போது சென்னை விமான நிலையத்தில் நடிகர் கமல் பேட்டியளித்துள்ளார். அப்போது அவர், “கிராமத்தின் பக்கம் மத்திய அரசின் பார்வை திரும்பி இருக்கிறது. மத்திய பட்ஜெட்டில் தமிழகம் பல ஆண்டுகளாகவே புறக்கணிக்கப்படுவது ஒரு சோகதையாக தொடர்கிறது. பட்ஜெட் குறித்து அறிஞர்களுடன் ஆலோசித்த பின்னரே எனது கருத்தை தெளிவாக கூற […]
இந்த ஆண்டிற்க்கான நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடரானது இன்று காலை 11 மணிக்கு தொடங்குகிறது. ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால், இரு அவைகளில் நடைபெறும் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உரை நிகழ்த்துகிறார்.. பின்னர் நிதியமைச்சர் அருண் ஜெட்லி நிதியறிக்கை வாசிப்பார்.அதன் பின்பே விவாதம் துவங்கும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரானது ஜனவரி மாத இறுதியில் துவங்கி ஏப்ரல் மாத துவக்கத்தில் முடிவடையும். இந்நிலையில் இந்த 2018-19ம் ஆண்டிற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 29 முதல் ஏப்ரல் 6ம் தேதி வரை நடைபெறும் என மத்திய அரசு ஏற்கனவே அறிவிப்பு செய்திருந்தது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதி ஜனவரி 29 முதல் பிப்ரவரி 9ம் தேதி வரையிலும், இரண்டாம் பகுதி மார்ச் 5ம் தேதி முதல் ஏப்ரல் 6ம் தேதி வரையிலும் […]
டெல்லி: வரும் பிப்ரவரி முதல் ஸ்மார்ட்போன் விலை உயர வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.வரும் பிப்ரவரி முதல் வாரத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. அதில் இறக்குமதி செய்யப்படும் ஸ்மார்ட்போன் மீதான வரியை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதனால் அதிக விலை மதிப்புள்ள போன்களின் விலை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் சீனா, கொரியா ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஸ்மார்ட்போன்களை இந்தியர்கள் பயன்படுத்தும் எண்ணிக்கை அதிகரித்து வரும் வேளையில் மத்திய அரசின் இந்த திட்டத்தால் […]