பி.எட் படிப்பிற்கு ஆண்டுக்கு ரூ.30,000 மேல் வசூலிக்கக்கூடாது என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி எச்சரிக்கை. சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, முன்னாள் நீதிபதி வெங்கட்ராமன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு கல்வியியல் கல்லூரியில் பி.எட் படிப்பிற்கு ஆண்டுக்கு ரூ.30,000 கட்டணம் நிர்ணயம் செய்திருந்தது என்றும் நிர்ணயிக்கப்பட்ட 30 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் வந்தது எனவும் தெரிவித்தார். அதன் அடிப்படையில் மீண்டும் கல்வித்துறை கட்டணம் குறித்து ஆலோசனையில் […]
பி.இ பி.டெக் படிப்பில் சேர துணை கலந்தாய்விற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு இன்று முதல் தொடங்குகிறது. அதன்படி, https://www.tneaonline.org/ என்ற இணையத்தளத்தில் வரும் 7 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்க மாணவர்கள் ஆர்வம் காட்டாததால் 90,000-க்கும் மேற்பட்ட இடங்கள் இந்த கல்வியாண்டில் காலியாகும் சூழல் உள்ளதாக தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் தெரிவித்தது. இந்நிலையில், அந்த இடங்களை நிரப்புவதற்கு வருகின்ற 7 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் இதனால், […]
பி.இ. மற்றும் பிடெக் உள்ளிட்ட பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வரும் 28-ஆம் தேதி வெளியீடு. தமிழகத்தில் உள்ள அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், அண்ணா மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழக, கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கான இணையதள பதிவு முடிவடைந்து, அதற்கான ரேண்டம் எண் கடந்த மாதம் 26-ம் தேதி வழங்கப்பட்டது. இதையடுத்து, 17-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், சில மாணவர்கள் சரியாக சான்றிதழ் பதிவேற்றம் […]
பி. இ., பி. டெக்., பி. ஆர்க்., மற்றும் எம்சிஏ படிப்புகளின் சேர விரும்பும் வெளி மாநில மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கான அவகாசத்தை செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டித்துள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் பி. இ.,பி. டெக்., பி. ஆர்க்., எம்சிஏ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பப்பதிவு நடைபெற்று வந்தது. இந்த படிப்புகளுக்கான விண்ணப்பப்பதிவு நாளையுடன் முடிவடைய […]