தமிழகம் உள்பட 8 மாநிலங்களில் பேராபத்தை விளைவிக்கும் ’பி.டி. கத்தரிக்காய் கள ஆய்வை’ நடத்த பாஜக அரசு அனுமதித்திருப்பது கண்டனத்திற்குரியது. முதலமைச்சர் பழனிசாமி அரசு இதனை முற்றிலும் நிராகரிக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். அதில், “மரபணு மாற்றம் செய்யப்பட்ட பி.டி. கத்தரிக்காய் விதைகளை” தமிழ்நாடு உள்ளிட்ட எட்டு மாநிலங்களில் களப்பரிசோதனை (Field Trial) செய்ய அனுமதிக்கும் மத்திய அரசின் முடிவிற்குத் திமுக சார்பில் கடும் எதிர்ப்பினைத் தெரிவித்துக் கொள்கிறேன். மனித குலத்திற்கும் – […]