இந்திய பங்குச்சந்தையில், சென்செக்ஸ் இன்று ஏற்றத்துடன் துவங்கியது. கடந்த வாரம் பெடரல் வங்கியின் வட்டி உயர்வால், தொடர்ந்து சென்செக்ஸ் புள்ளிகள் சரிந்த விதம் இருந்தது. இந்நிலையில் இன்று பங்குச்சந்தையில் சென்செக்ஸ் மீண்டும் ஏற்றத்துடன் துவங்கியது. இந்திய பங்குச்சந்தையில் இன்று பிஎஸ்இ சென்செக்ஸ் 312 புள்ளிகள் அதிகரித்து 56,910 ஆகவும், என்எஸ்இ நிஃப்டி 84 புள்ளிகள் அதிகரித்து 16,943 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது. முந்தைய நாள் நிலவரப்படி சென்செக்ஸ் 56,598 புள்ளிகளுடன், நிஃப்டி 16,858 புள்ளிகளுடன் வர்த்தகம் செய்யப்பட்டது.
இந்திய பங்குச்சந்தையில், சென்செக்ஸ் இன்று சற்று ஏற்றத்துடன் துவங்கியது. கடந்த வாரம் பெடரல் வங்கியின் வட்டி உயர்வால், தொடர்ந்து சென்செக்ஸ் புள்ளிகள் சரிந்த விதம் இருந்தது. தற்போது சற்று உயரத்தொடங்கியுள்ளது. பிஎஸ்இ சென்செக்ஸ் 106 புள்ளிகள் அதிகரித்து 57,251 ஆகவும், என்எஸ்இ நிஃப்டி 15 புள்ளிகள் அதிகரித்து 17,031 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது. முந்தைய நாள் நிலவரப்படி சென்செக்ஸ் 57,145 புள்ளிகளுடன், நிஃப்டி 17,016 புள்ளிகளுடன் வர்த்தகம் செய்யப்பட்டது.
பிஎஸ்இ சென்செக்ஸ் 178.91 புள்ளிகள் உயர்ந்து, 54,704.84 புள்ளிகளாகவும், நிப்டி 50.90 புள்ளிகள், 16,333.15 ஆகவும் சரிந்தது. ஈக்விட்டி பெஞ்ச்மார்க் சென்செக்ஸ் வியாழக்கிழமை ஆரம்ப வர்த்தகத்தில் 150 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது. உலகளாவிய சந்தைகளில் பெருமளவு நேர்மறையான போக்கிற்கு மத்தியில் குறியீட்டு ஹெவிவெயிட்ஸ் ஐடிசி, ஐசிஐசிஐ வங்கி மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகியவற்றின் லாபங்களைக் கண்காணித்தது. 30 பங்கு பிஎஸ்இ சென்செக்ஸ் குறியீடு 155.90 புள்ளிகள் அல்லது 0.29 சதவீதம் உயர்ந்து, 54,681.83 ஆக வர்த்தகம் செய்யப்பட்டது. […]
இந்திய பங்குச்சந்தைகள் இன்று உயர்வுடன் தொடங்கியுள்ளன. முதலீட்டாளர்கள் நம்பத்தகுந்த சொத்துக்களின் உரிமையை வாங்கி விற்கக்கூடிய இடம் பங்குச்சந்தை ஆகும். கடந்த 1-ஆம் தேதி 2021 – 22 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.பட்ஜெட் அறிவிப்புகள் வெளியாகிய நிலையில்,அண்மைக்காலமாக மும்பை மற்றும் தேசிய பங்குசந்தைக்களில் வர்த்தகம் ஏற்றத்துடன் காணப்படுகிறது. அந்த வகையில் இன்று மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 334.44 புள்ளிகள் உயர்ந்து , 50,948.73 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தையின் […]
கொரோனா வைரஸ் காரணமாக இன்று மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 2,300 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 31,820 புள்ளிகளில் வர்த்தகம் ஆனது. மேலும் தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 700 புள்ளிகள் சரிந்து 9,250 புள்ளிகளில் வர்த்தகம் ஆனது. இந்நிலையில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 2,713 புள்ளிகள் குறைந்து 31,390-ல் வணிகம் நிறைவு பெற்றது.அதேபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 756 புள்ளிகள் குறைந்து 9,199-ல் வர்த்தகம் நிறைவு பெற்றது.