இந்திய பங்குச்சந்தையில், சென்செக்ஸ் இன்று சற்று ஏற்றத்துடன் துவங்கியது. கடந்த வாரம் பெடரல் வங்கியின் வட்டி உயர்வால், தொடர்ந்து சென்செக்ஸ் புள்ளிகள் சரிந்த விதம் இருந்தது. தற்போது சற்று உயரத்தொடங்கியுள்ளது. பிஎஸ்இ சென்செக்ஸ் 106 புள்ளிகள் அதிகரித்து 57,251 ஆகவும், என்எஸ்இ நிஃப்டி 15 புள்ளிகள் அதிகரித்து 17,031 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது. முந்தைய நாள் நிலவரப்படி சென்செக்ஸ் 57,145 புள்ளிகளுடன், நிஃப்டி 17,016 புள்ளிகளுடன் வர்த்தகம் செய்யப்பட்டது.
(F&O) வின் வார காலாவதியால் சென்செக்ஸ் சரிந்து பங்குச் சந்தையில் பிஎஸ்இ சென்செக்ஸ் மற்றும் என்எஸ்இ நிஃப்டி 50 ஆகியவை சிவப்பு நிறத்தில் வர்த்தகம் செய்யப்பட்டன. பங்குச்சந்தை வர்த்தகத்தில் சிவப்பு நிறம் என்பது முந்தைய நாள் வர்த்தகத்தை விட விலை சரிந்து விற்கப்பட்டதைக் குறிக்கும். அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ், தொடர்ந்து மூன்றாவது முறையாக வட்டி விகிதங்களை 75 பிபிஎஸ் உயர்த்தியுள்ளனர். இது ஃபெடரல் ஃபண்ட்டின் வட்டி விகிதத்தை 3% இலிருந்து 3.25% க்கு கொண்டு செல்கிறது. இதற்கு […]
இந்தியப் பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி சென்செக்ஸ் 600 புள்ளிகள் உயர்ந்து 59,761 புள்ளிகளுடன் வர்த்தகம் திறக்கப்பட்டது. சென்செக்ஸ் 600 புள்ளிகள் உயர்ந்து 59,761 புள்ளிகளுடனும், நிஃப்டி 164.20 புள்ளிகள் அதிகரித்து 17,786.50 புள்ளிகளுடனும் ஏற்றம் பெற்று உயர்வுடன் காணப்படுகிறது. இந்த ஏற்றத்தின் மூலம் ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ், இண்டஸ்இண்ட் வங்கி, டாடா மோட்டார்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ் மற்றும் டெக் மஹிந்திரா போன்ற நிறுவனங்கள் குறிப்பிடத்தக்க நிஃப்டி லாபம் பெற்றன. NSE நிஃப்டி 50 குறியீடு 1.13 சதவீதம் […]