பிஎஸ்6 வாகனங்களின் அதிக விலை உயர்வால் பெரும்பாலான டீலர்களுக்கு வந்த அழைப்புகளில் அதிகமானவை முன்பதிவை ரத்து செய்வதற்கான வழிமுறைகளை கேட்பதாகவே இருந்ததாம். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முன்னெடுக்கப்பட்டுள்ள பொதுஊரடங்கால் பல்வேறு தொழில்நிறுவனங்கள் முடங்கின. இதனால் பலரது தங்கள் அன்றாட வாழ்வும் பாதிக்கப்பட்டது. இதனால் பெரும்பாலான மக்கள் நிதி பற்றாக்குறையினால் தவிக்கும் நிலைக்கு உள்ளானார்கள். இதன் காரணமாக பலர் தங்கள் கனவு வாகனமாக முன்பதிவு செய்த கார்களை வாங்க முடியாமல் முன்பதிவினை ரத்து செய்வதில் ஆர்வம் காட்டுவதாக தற்போது தகவல் வெளியாகி கொண்டிருக்கிறது. […]