ஆம்பூரில் அரசு சார்பில் நாளை நடைபெறவிருந்த பிரியாணி திருவிழா தற்காலிகமாக ஒத்திவைப்பு. திருப்பூர் மாவட்ட நிர்வாக சார்பில் ஆம்பூரில் நாளை முதல் 15-ஆம் தேதி வரை மூன்று நாட்கள் பிரியாணி திருவிழா நடைபெறும் என்று அம்மாவட்ட ஆட்சியர் ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது சர்ச்சை எழுந்த நிலையில், ஆம்பூர் பிரியாணி திருவிழா தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த திருவிழாவில் மாட்டிறைச்சி பிரியாணிக்கு அனுமதி மறுக்கப்பட்டதை தொடர்ந்து, தலித், இஸ்லாமிய கூட்டமைப்புகள் மற்றும் விசிக உள்ளிட்ட […]