உக்ரைனுக்கு கண்ணிவெடிகளை அகற்ற 1000 மெட்டல் டிடெக்டர்கள் மற்றும் செயலிழக்கச் செய்யும் 100 கருவிகளையும் பிரிட்டன் வழங்கியுள்ளது. ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையில் போரானது ஒரு முடிவில்லாமல் நடைபெற்று கொண்டிருக்கிறது. ஏவுகணை தாக்குதல்கள் மூலம் பாதிப்படைந்த தங்களது சாலைகள் மற்றும் கட்டமைப்புகளை சீரமைக்கும் முயற்சியில் உக்ரைன் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனுக்கு உதவுவதற்காக 1000க்கும் மேற்பட்ட மெட்டல் டிடெக்டர்கள் மற்றும் கண்ணி வெடிகளை செயளிக்கச்செய்யும் 100 கருவிகளையும் பிரிட்டன் வழங்கியுள்ளது.கண்ணிவெடிகளை செயலிழக்கச்செய்யும் முயற்சிகளை பாதுகாப்பாக […]
பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் கட்சி வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்ட தொழிற்கட்சி வேட்பாளர் சமந்தா டிக்சன் வெற்றி. பிரிட்டன் இடைத்தேர்தலில் ரிஷி சுனக் கட்சி வேட்பாளர் படுதோல்வி அடைந்துள்ளார். இங்கிலாந்தின் வடமேற்கில் உள்ள செஸ்டர் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் எதிர்க்கட்சியான தொழிற்கட்சி வேட்பாளர் சமந்தா டிக்சன் வெற்றி பெற்றுள்ளார். செஸ்டர் தொகுதி ஏற்கனவே தொழிலாளர் கட்சியிடம் இருந்த தொகுதி தான். இப்போது அதைத் தக்க வைத்துள்ளனர். தொழிற்கட்சி வேட்பாளர் சமந்தா டிக்சன் 61% வாக்குகளை பெற்று அபார […]
பிரிட்டனில் நீண்ட காலம் ஆட்சி செய்த ராணியான இரண்டாம் எலிசபெத் மகாராணி, 70 ஆண்டுகால ஆட்சிக்குப் பிறகு தனது 96வது வயதில் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் காலமானார். ராணியின் மறைவுக்கு உலக தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 10 நாட்கள் துக்க அனுசரிப்பிற்கு பிறகு ராணியின் இறுதிச் சடங்குகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இரண்டாம் எலிசபெத் மகாராணியின் உடலும், ஒன்றறை வருடங்களுக்கு முன் இறந்த அவரது கணவரான பிலிப்பின் உடலும் அருகருகே அரசு […]
சுனக் & டிரஸ் இடையேயான பிரிட்டன் பிரதமர் பந்தயத்தில் வாக்குப்பதிவுகள் முடிந்தது. செப் 5ல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட உள்ளது. பிரிட்டனின் அடுத்த பிரதமராக போரிஸ் ஜான்சனுக்குப் பதிலாக ரிஷி சுனக் மற்றும் லிஸ் ட்ரஸ் இடையேயான கன்சர்வேடிவ் கட்சியின் தலைமைப் போட்டியில் நேற்று(செப் 2) வாக்குப்பதிவு முடிந்தது. வெற்றியாளர் யார் என்ற முடிவு செப்டம்பர் 5 ஆம் தேதி மதியம் 12:30 மணிக்கு அறிவிக்கப்படும். பின்னர் தேர்தலில் வெற்றி பெற்ற நபர் செப்டம்பர் 6 ஆம் தேதி, […]
பிரிட்டனின் அடுத்த பிரதமரை தேர்வு செய்வதற்காக வாக்கெடுப்பில் பிரிட்டன் நாட்டின் முன்னாள் நிதியமைச்சர் இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் ராஜினாமை தொடர்ந்து , ‘ரிஷி சுனக்’ கடந்த ஜூலை 13 புதன்கிழமை, பிரிட்டனை ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராகவும், பிரிட்டனின் பிரதமராகவும் வெற்றிபெறும் போட்டியில் முதல் சுற்றில் வெற்றிபெற்று முன்னணியில் இருந்தார். கன்சர்வேட்டிவ் எம்.பி.க்களின் முதல் வாக்குப்பதிவில், ரிஷி சுனக் 88 வாக்குகளைப் பெற்ற நிலையில், பென்னி […]
இங்கிலாந்து முழுவதும் 70 நிறுவனங்களை சேர்ந்த 3000 ஊழியர்களுக்கு முழு ஊதியத்துடன் வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை என்ற திட்டம் சோதனை அடிப்படையில் அமல்படுத்தப்பட்டுள்ளது.கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம்,ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் பாஸ்டன் கல்லூரி ஆராய்ச்சியாளர்களுடன் 4 டே வீக் குளோபல் இணைந்து இத்திட்டத்தை நடத்துகின்றன. அதன்படி,நேற்று முதல் இங்கிலாந்தில் உள்ள வங்கிகள் உட்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள் இத்திட்டத்தில் பங்கெடுத்துள்ளன. இதன்மூலம்,ஊழியர்கள் தங்கள் அதிகபட்ச உற்பத்தி திறனை வெளிப்படுத்துவார்கள் என்ற நோக்கத்தில் அவர்களுக்கு 100% ஊதியத்துடன் […]
கோடைக்கால ராயல் கார்டன் விருந்து நிகழ்ச்சியில் பிரிட்டன் ராணி எலிசபெத் கலந்துகொள்ளமாட்டார் என அறிவிப்பு. உடல்நலக்குறைவு மற்றும் வயது முதிர்வு காரணமாக ஓய்வில் உள்ள பிரிட்டன் ராணி எலிசபெத், ஆண்டுதோறும் நடக்கும் கோடைக்கால ராயல் கார்டன் விருந்து நிகழ்ச்சியில் இந்தாண்டு கலந்துகொள்ள மாட்டார் என பக்கிங்காம் அரண்மனை அறிவித்துள்ளது. இதனால் ராயல் கார்டன் விருந்தில் ராணிக்கு பதிலாக அரச குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களால் பிரதிநிதித்துவப்படுத்தப்படுவார் என்று பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது. 96 வயதான பிரிட்டன் ராணி எலிசபெத், […]
பிரிட்டனில் நடைபெற உள்ள போர் விமான பயிற்சியில் இந்தியா கலந்து கொள்ளாது என இந்திய விமானப்படை அறிவிப்பு. ‘எக்ஸ் கோப்ரா வாரியர் 22’ என்ற பெயரில் இங்கிலாந்தின் வாடிங்டனில் மார்ச் 6 முதல் 27 வரை நடைபெறவுள்ள பன்னாட்டு விமானப்படை பயிற்சியில் இந்திய விமானப்படை பங்கேறக்காது என்று இந்திய விமானப்படை அறிவித்துள்ளது. இந்திய விமானப்படையின் இலகு ரக போர் விமானமான (LCA) தேஜஸ், இங்கிலாந்து மற்றும் பிற முன்னணி நாடுகளின் விமானப்படைகளின் போர் விமானங்களுடன் இணைந்து பங்கேற்க […]
ரஷ்யா மீது விதிக்கப்ட்டுள்ள பொருளாதார தடைக்கு சம்மதம் தெரிவிப்பதாக பிரிட்டன் பிரதமர் அறிவிப்பு. உக்ரைன் மீது தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வரும் ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்க பிரிட்டன் முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார். முன்னதாக ரஷ்யா மீது கடுமையான பொருளாதார உள்ளிட்ட தடைகளை விதிக்க தயார் என்று ஜெர்மனியின் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், பிரிட்டனின் நட்பு நாடுகள் அனைத்தும் ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்க முடிவெடுத்துள்ளன […]
பிரிட்டனில் மிகப்பெரிய இணைய செயலிழப்பு ஏற்பட்டதன் காரணமாக அரசு,செய்தி மற்றும் சமூக வலைத்தளங்கள் அனைத்தும் முடங்கியுள்ளன. பிரிட்டனில் செயல்பட்டு வரும் ‘ஃபாஸ்ட்லி’ (Fastly) எனும் கிளவுட் கம்ப்யூட்டிங் சேவை வழங்கும் நிறுவனம் ‘எட்ஜ் கிளவுட்’ (Edge Cloud) என்ற சேவையை பல வலைதளங்களுக்கு வழங்குகிறது.அதன்படி,இது வலைதளங்களின் லோடிங் நேரத்தை (loading time) குறைப்பதற்கும்,சேவை மறுப்பு பிரச்சினைகளிலிருந்து தளங்களை பாதுகாப்பதற்கும்,இணைய போக்குவரத்து சிக்கல்களை சமாளிக்க உதவுவதற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,உலகம் முழுவதும் உள்ள பைனான்சியல் டைம்ஸ்,நியூயார்க் டைம்ஸ், சி.என்.என் மற்றும் […]
பிரிட்டனில் கொரோனா 3 ஆம் அலை பரவல் தொடங்கியுள்ளதாக இந்தியாவைப் பூர்விகமாக கொண்ட பேராசிரியர் ரவி குப்தா எச்சரிக்கை விடுத்துள்ளார். உலகம் முழுவதும் கடந்த இரண்டு மாதங்களாக கொரோனா வைரஸின் இரண்டாம் அலையானது மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதாவது,கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிகையும் அதிகரித்து வருகிறது. இதனால்,கொரோனா பரவலை கட்டுப்படுத்த அந்தந்த நாட்டு அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.எனினும்,கொரோனா வைரஸின் இரண்டாம் அலையிலிருந்து முழுமையாக மீளமுடியாத சூழல் உள்ளது. இந்நிலையில்,கொரோனா […]
வரும் 24ம் தேதி முதல் 30ம் தேதி வரை பிரிட்டனுக்கு இயக்கப்பட இருந்த அனைத்து விமானங்களும் ரத்து என்று ஏர் இந்தியா அறிவித்துள்ளது. கொரோனா எதிரொலி காரணமாக ஏப்ரல் 24 முதல் 30 வரை இந்தியாவில் இருந்து பிரிட்டனுக்கு செல்லவிருந்த விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. பிரிட்டனுக்கான அனைத்து அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக தெரிவித்துள்ளது. பிரிட்டனில் இருந்து இந்தியா வரவும், இந்தியாவில் இருந்து பிரிட்டன் செல்லவும் விமானங்கள் ரத்து செய்யப்படுகிறது. […]
மீண்டும் இந்தியா – பிரிட்டன் இடையே வரும் 8ம் தேதி முதல் விமான சேவை தொடங்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. பிரிட்டனில் புதிய வகையான உருமாறிய கொரோனா வைரஸ், அதிவேகமாக பரவி வருவதால், இந்தியா உட்பட 50-க்கும் மேற்பட்ட நாடுகள் பிரிட்டனுடன் விமான சேவைகளை நிறுத்தியுள்ளது. மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம், ஏற்கனவே டிசம்பர் 22 ஆம் தேதி டிசம்பர் 31-ஆம் தேதி இரவு வரை பிரிட்டன் விமானங்கள் இந்தியா வருவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, […]
பிரிட்டனில் அதிவேகமாக கொரோனா பரவிவரும் நிலையில், ஆக்ஸ்போர்டு மற்றும் அஸ்ட்ராசெனக்கா இணைந்து தயாரித்துள்ள கொரோனா தடுப்பு மருந்திற்கு அந்நாட்டு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. உலகளவில் கொரோனா பரவல் அதிகரித்து கொண்டே வரும் நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்கா, இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட உலக நாடுகள் தீவிரமடைந்துள்ளது. இதில் பல தடுப்பூசிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதை தொடர்ந்து, இங்கிலாந்து, ரஷ்யா, அமெரிக்காவில் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கியுள்ளது. அதன்படி தற்பொழுது […]
கொரோனா வைரஸ் மற்றும் காய்ச்சலை 90 நிமிடங்களுக்குள் கண்டறியக்கூடிய இரண்டு சோதனை கிட் பிரிட்டன் தயாரிக்க உள்ளது என்று நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அடுத்த வாரம் தொடங்கி, மருத்துவமனைகள், மருத்துவ இல்லங்கள் மற்றும் ஆய்வகங்கள் டி.என்.ஏவை ஆய்வு செய்யும் 5.8 மில்லியன் சோதனைகள் மற்றும் 450,000 ‘Cotton swab’ அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘Cotton swab’ ஆய்வு செய்யும் 5,000 டி.என்.ஏ சோதனை இயந்திரங்கள் செப்டம்பர் முதல் என்.எச்.எஸ் மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும். மேலும் இந்த ஆண்டின் […]
பிரிட்டனை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் சிறப்பு விமானம் மூலம் நாடு திரும்பினர். கொரோனா வைரஸின் தீவிர பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில், இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், வெளிமாநிலங்கள் மற்றும் மற்ற நாடுகளில் இருந்து வந்தவர்களும் தங்களது சொந்த ஊருக்கு செல்ல இயலாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில், சர்வதேச விமான போக்குவரத்து நிறுத்தப்பட்ட நிலையில், பிரிட்டனில் இருந்து சுற்றுலா வந்த பிரிட்டன் வாழ் இந்தியர்கள் […]
பிரிட்டனில் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட 492 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸானது, தொடர்ந்து பல நாடுகளை தாக்கி வருகிறது. இதனால், ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் நோயானது, இந்தியாவிலும் பல்லாயிரக்கணக்கானோரை பாதித்துள்ளது. இந்நிலையில், இந்தியர்கள் பலர் வெளிநாடுகளில் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். வெளிநாடுகளில் பரவி வந்த அந்த கொரோனா வைரஸ் அங்குள்ள இந்தியர்களையும் தாக்கி உள்ளது. இந்தியாவை பூர்விகமாக கொண்ட பலர் பிரிட்டனில் உள்ளனர். பிரிட்டனில், கொரோனா வைரஸால் […]
நாய்களின் மோப்பத்திறனை பயன்படுத்தி கொரோனாவை கண்டுபிடிக்க முடியுமா? என பிரிட்டன் விஞ்ஞானிகள் ஆய்வு. முதலில் சீனாவை தாக்கிய கொரோனா வைரஸானது தொடர்ந்து மற்ற நாடுகளையும் தாக்கி வருகிறது. இதனால் உலகமே அச்சத்தில் உள்ள நிலையில், இதற்கு மருந்து கண்டறியும் முயற்சியில் பல நாடுகள், தீவிரமாக இறங்கியுள்ளன. இந்நிலையில், கொரோனா வைரஸ் பற்றி கண்டறிய பரிசோதனைகள் போதுமானதாக இல்லை என பல நாடுகளில் குற்றச்சாட்டுகள் எழுந்து வந்த நிலையில், ரேபிட் கிட் கருவிகள் மூலம் அரை மணி நேரத்தில் […]
மருத்துவமனைக்கு ஸ்கேன் எடுப்பதற்கு சென்ற 5 மாத கர்ப்பிணி பெண் அதிர்ச்சியில் உறைந்த சம்பவம். ஸ்கேன் அறிக்கையில் நாய் உருவம் திரும்பி பார்ப்பது போன்று தோன்றும் குழந்தை. பிரித்தானியாவை சேர்ந்த ஜோ கிறீர் என்ற 5 மாத கர்ப்பிணி பெண் ஸ்கேன் எடுப்பதற்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.பின்னர் ஸ்கேன் பரிசோதனை செய்து முடித்துவிட்டு அந்த ஸ்கேன் பரிசோதனை அறிக்கையை பார்த்துள்ளார். அதில் குழந்தையின் முகம் மனித உருவம் மாதிரி இல்லாமல் நாய் உருவத்தை போன்று இருந்ததோடு தலையை திருப்பி […]
பிரிட்டன் பிரதமர் நெருக்கடியில் ப்ரெக்ஸிட் ஒப்பந்தத்தை நிறைவேற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றார். ஐரோப்பிய யூனியனில் இருந்து வருகின்ற மார்ச் மாதம் 29ஆம் தேதி இரவு 11 மணிக்கு பிரிட்டன் வெளியேறுகிறது. இதற்காக ப்ரெக்ஸிட் ஒப்பந்தத்தை நிறைவேற்றும் முயற்சியில் பிரிட்டன் பிரதமர் தெரசாமே தீவிரமாக இறங்கியுள்ளார். இந்நிலையில் ப்ரெக்ஸிட் ஒப்பந்தத்தில் வெளியேறுவது முதல் நாட்டின் பல்வேறு நலன்களில் தெரசாமே சமரசம் செய்து கொள்ளவதாக MP_க்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே நாடாளுமன்றத்தில் தெரசா ஒப்புதலுக்காக ப்ரெக்ஸிட் ஒப்பந்தத்தை வைத்த போது ஒப்பந்தத்திற்கு MP_க்கள் எதிர்ப்பு தெரிவித்துதனர். […]