தொல்லியல் துறையின் முறையான அனுமதி பெறவில்லை எனவே குடமுழுக்கு நடத்த தடை விதிக்கவேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையில், தமிழ், சமஸ்கிருதம் என இரண்டு மொழிகளில் குடமுழுக்கு நடத்தப்படும் என்று அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. தஞ்சாவூர் பெரிய கோவிலில் சீரமைப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் குடமுழுக்கு தமிழில் நடத்த வேண்டும் என ஒரு தரப்பினர் கூறிவருகின்றனர்.ஆனால் ஆண்டாண்டு காலமாக ஆகம விதிகளின் படியே குடமுழுக்கு நடத்த வேண்டும் […]