பிரிக்ஸ் (BRICS) உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடி பிரேசில் புறப்பட்டு சென்றுள்ளார். பிரேசிலில் 11-ஆவது பிரிக்ஸ் (BRICS) உச்சி மாநாடு நடைபெறுகிறது.இந்த மாநாட்டில் பிரேசில்,ரஷ்யா,இந்தியா,சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளின் அதிபர்கள் பங்கேற்கின்றனர்.இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி பிரேசில் சென்றடைந்துள்ளார்.இரண்டு நாடகள் நடைபெறும் இந்த மாநாட்டில் ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜின்பிங்கை பிரதமர் மோடி தனித்தனியே சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.