சென்னை : குஜராத்தில் 5 ரூபாய் லஞ்சம் வாங்கிய கணினி ஆபரேட்டரை லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடியாக கைது செய்துள்ளது. குஜராத் அகமதாபாத்தின் ஜாம்நகர் மாவட்டத்தில் மோர்கண்டா கிராம அலுவலகத்தில் விவசாயிகளுக்கு அரசு நில ஆவணங்களை வழங்க ரூ.5 வாங்கிய மோர்கண்டா கிராமத்தைச் சேர்ந்த கணினி ஆபரேட்டர் நவீன்சந்திர நகும் என்பவரை லஞ்ச ஒழிப்புத்துறை கைது செய்துள்ளனர். நில ஆவணங்களை வழங்க ரூ.5 வாங்கும் தகவலை காவல்துறையினருக்கு சிலர் தெரிவித்த நிலையில், மோர்கண்டா இன்ஸ்பெக்டர் எம்.டி.படேல் குழு ஒன்றை […]
லஞ்சம் வாங்கும் போலீசுக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிஜிபிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு. கையூட்டு (லஞ்சம்) பெறும் காவல்துறையினர் மீது ஒழுங்கு நடவடிக்கை மட்டுமல்லாது குற்றவியல் நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. லஞ்சம் வாங்கிய சிறப்பு உதவி ஆய்வாளர் குமாரதாஸின் ஓதிய உயர்வு பலன்களை நிறுத்தி வைத்தது எதிர்த்து மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையில், சமுதாயத்தையும், அரசின் நலத்திட்டங்கள் அமல்படுத்தப்படுவதையும் ஊழல் […]
இலவச மின்சாரம் பெற 10 ஆயிரம் லஞ்சம் பெற்ற கிருஷ்ணகிரி பெண் பொறியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். லஞ்சம் வாங்க கூடாது என்பது அரசு தனியார் என இரண்டு துறை அலுவலர்களுக்கும் விதிக்கப்பட்ட ஒன்று. இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் அருகே கெலமங்கலத்தில் இலவச மின்சாரம் பெறுவதற்காக வெங்கடேசன் என்பவரிடம் 10,000 ரூபாயை லஞ்சமாக பெற்ற தென்னரசு எனும் மின்வாரிய இளநிலை பொறியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடம் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெரம்பலூரில் தமிழக அரசின் திருமண உதவித்திட்டத்திற்கு பரிந்துரைக்க பெண்ணிடம் ரூ.2000 லஞ்சம் கேட்டதாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து தாலிக்கு தங்கம் வாங்கும் திட்டத்திற்காக ரூ.2000 லஞ்சம் வாங்கிய சமூக நலத்துறை அலுவலரை பெரம்பலூர் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு கையும், களவுமாக பிடித்து கைது செய்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டம், எறைய சமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி மகன் சதீஷ் என்பவருக்கு, அதே கிராமத்தை சேர்ந்த ஷாலினி என்ற […]