வாஷிங்டன் : அமெரிக்காவில் சூரிய மின்சக்தித் திட்டத்தில் முதலீட்டாளர்களை ஏமாற்றியதாகவும், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும் கவுதம் அதானி மீது பல குற்றச்சாட்டுகள் எழுந்தது. இந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து, அதானிக்கு அமெரிக்க நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்தது. இதற்கு, ‘இந்த குற்றச்சாட்டுக்களை நாங்கள் மறுக்கிறோம். குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும் வரை குற்றம் சாட்டப்பட்டவர்கள் நிரபராதிகளாக கருதப்படுவார்கள்’ என அதானி குழுமம் அறிக்கை வெளியிட்டு தெரிவித்திருந்தது. மேலும், அமெரிக்கா முன்வைத்த குற்றசாட்டைத் தொடர்ந்து, இந்திய பங்குசந்தையில் கடும் சரிவும் ஏற்பட்டது. இந்த வழக்கில் […]
நைரோபி : அமெரிக்க முன்வைத்த குற்றச்சாட்டால் அதானி நிறுவனப் பங்குகள், நேற்று பங்குச்சந்தையில் கடும் சரிவைக் கண்டது. இதன் விளைவாக இந்தியப் பங்குச்சந்தையும் நேற்று காலை முதல் கடும் வீழ்ச்சியை கண்டு சரிவிலே முடிந்தது. இந்த நிலையில், அதானி நிறுவனங்களுடனான தொழில் ஒப்பந்தங்களை ரத்து செய்வதாக அறிவித்த கென்யா அரசின் இந்த அறிவிப்பு உலக நாடுகளிடையே பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. அமெரிக்க முன் வைத்த குற்றச்சாட்டு : அமெரிக்காவில் சூரிய மின்சக்தித் திட்டத்தில் முதலீட்டாளர்களை ஏமாற்றியதாகவும், அதிகாரிகளுக்கு […]
டெல்லி : அமெரிக்காவில் கவுதம் அதானி உள்ளிட்ட அதானி குடும்பத்தினருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ‘அமெரிக்காவில் திரட்டிய நிதியை பயன்படுத்த மாட்டோம்’ என்று அதானி கிரீன் எனர்ஜி விளக்கம் அளித்துள்ளது. இந்தியாவில் சூரிய மின்சார விநியோகம் தொடர்பான ஒப்பந்தம் பெறுவதற்கு சுமார் 2,110 ஆயிரம் கோடி ரூபாய் லஞ்சம் தர கவுதம் அதானி முன்வந்ததாகக் கூறி அமெரிக்க நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. இந்த விவகாரத்தில் கவுதம் அதானி, அவரது உறவினர் சாகர் அதானி உட்பட 7 பேர் […]
டெல்லி : இந்தியாவின் பெரும் தொழிலதிபர்களில் ஒருவரான கவுதம் அதானி மீது அமெரிக்காவில் கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதன் காரணமாக, கௌதம் அதானி மற்றும் அவரது மருமகன் சாகர் அதானி ஆகியோருக்கு அமெரிக்க பெடரல் நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. அதாவது, சூரிய சக்தி மின்சார ஒப்பந்தம் பெற இந்திய அரசு அதிகாரிகளுக்கு 250 மில்லியன் டாலர்களுக்கு மேல் (சுமார் ரூ. 2110 கோடி) லஞ்சம் கொடுக்க கொடுக்கப்பட்டதாக தொழிலதிபர் கவுதம் அதானி மீது நியூயார்க் நீதிமன்றத்தில் […]
திண்டுக்கல்லில் அரசு மருத்துவரிடம் லஞ்சமாக ரூ.51 லட்சம் பெற்ற அமலாக்கத்துறை அதிகாரி ஒருவர் கையும், களவுமாக கைது செய்யப்பட்டார். சொத்துகுவிப்பு தொடர்பான வழக்கில் இருந்து விடுவிக்க மருத்துவர் சுரேஷ் பாவிடம் லஞ்சம் பெற்ற அமலாக்கத்துறை அதிகாரி அங்கிட் திவாரி கைது செய்யப்பட்டார். மருத்துவர் சுரேஷ் பாபுவிடம் அவர் மீதான வழக்கை முடித்து தருவதாக கூறி, முதலில் ரூ.20 லட்சம் பெற்ற நிலையில், மீதமுள்ள ரூ.31 லட்சத்தை வாங்கியபோது கையும் களவுமாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் சிக்கினார். பணத்துடன் […]
சமுதாயத்தை கரையான் போல் ஊழல் செல்லரிக்க செய்துவிட்டது என்று சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. ஊழல் வேர் பரவி கரையான் போல் சமுதாயத்தை செல்லரித்துள்ளது என்று சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. லஞ்சம் பெறுவது என்பது தற்போது வாடிக்கையாகிவிட்டது என்றும் ஊழல் வழக்குகளில் சிக்குவோருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டியது அதிகாரிகள் கடமை எனவும் நிதிபதிகள் வைத்தியநாதன், நக்கீரன் ஆகியோர் ஆதங்கத்துடன் கருத்து கூறியுள்ளனர். மேலும், ஊழல் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தவறுவோருக்கு […]
மதுரை மாவட்டத்தில் சொத்துவரி மதிப்பீடு செய்வதற்காக ரூ.4,000 லஞ்சம் வாங்கிய மாநகராட்சி ஊழியர் லஞ்ச ஒழிப்பு துறையால் நூதன முறையில் பிடிபட்டு கைதாகியுள்ளார். மதுரை மாவட்டம் அழகப்பன் நகர் பகுதியை சேர்ந்தவர் பரிமளா, இவரின் மகன் ஈசுவரபிரசாத். ஈசுவரப்பிரசாத்திற்கு(46) அந்த பகுதியில் சொந்தமாக 2 கடைகள் இருக்கிறது. மேலும் இவரது தாயார் பரிமளாவின் பெயரில் ஒரு குடோன் உள்ளது. அதனால் இவற்றை சொத்துவரி மதிப்பீடு செய்வதற்காக மதுரை தெற்கு மண்டல அலுவலகத்திற்கு சென்றுள்ளார். […]
இளம்பெண்ணிடம் லஞ்சம் வாங்கிய பெண் போலீஸ் குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகியதையடுத்து அவர் மீது தற்பொழுது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே எனும் மாவட்டத்தில் பெண் காவல் அதிகாரி ஒருவர் இளம்பெண் ஒருவரிடம் லஞ்சம் வாங்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. லஞ்சம் வாங்குவது தவறு என கூறினாலும், இன்னும் இந்தியாவில் லஞ்சம் வாங்கும் அதிகாரிகளும் சரி, லஞ்சம் கொடுக்கும் பணம் படைத்தவர்களும் சரி திருந்தியபாடில்லை. தற்பொழுது மஹாராஷ்டிராவில் சாலையோரங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த […]
இலவச மின்சாரம் பெற 10 ஆயிரம் லஞ்சம் பெற்ற கிருஷ்ணகிரி பெண் பொறியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். லஞ்சம் வாங்க கூடாது என்பது அரசு தனியார் என இரண்டு துறை அலுவலர்களுக்கும் விதிக்கப்பட்ட ஒன்று. இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் அருகே கெலமங்கலத்தில் இலவச மின்சாரம் பெறுவதற்காக வெங்கடேசன் என்பவரிடம் 10,000 ரூபாயை லஞ்சமாக பெற்ற தென்னரசு எனும் மின்வாரிய இளநிலை பொறியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடம் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காவல் உதவி ஆணையர் வின்சென்ட் ஜெயராஜ் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் மக்களவை மற்றும் 18 தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.இதற்கான தேர்தல் முடிவுகள் மே 23-ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே தேர்தல் ஆணையம் அதன் பணிகளை முழு வீச்சில் செய்து வருகின்றது.குறிப்பாக பறக்கும் படை ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லும் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றது. இந்நிலையில் […]