இன்று ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் விலகுவது குறித்து வாக்கெடுப்பு நடைபெறுகிறது. ஐரோப்பிய யூனியனில் இருந்து விலக பிரிட்டன் முடிவு செய்தது.இதற்காக ஐரோப்பிய ஒன்றியத்துடன் பிரெக்ஸிட் ஒப்பந்தம் ஏற்பட்டது பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்தார். ஆனால் எதிர்க்கட்சிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது.வருகின்ற 31-ஆம் தேதியுடன் பிரெக்ஸிட்டுக்கான காலக்கெடு முடிவடைய உள்ளது.இன்று ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் விலகுவது குறித்து வாக்கெடுப்பு பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நடைபெறுகிறது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது என்று பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். ஐரோப்பிய யூனியனில் இருந்து விலக பிரிட்டன் முடிவு செய்தது. இதற்காக பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை நிறைவேற்றும் முயற்சியில் பிரிட்டன் பிரதமர் தெரசாமே தீவிரமாக ஈடுபட்டு வந்தார். ஆனால் இழுபறி நீடித்து வந்த நிலையில் தனது பதவியை ராஜினாமா செய்வதாக தெரசாமே தெரிவித்தார். பின் தெரசா மே ராஜினாமா செய்த நிலையில், பிரிட்டனின் புதிய பிரதமராக கன்சர்வேடிவ் கட்சியின் […]