பிரேசில் நாட்டில் இரண்டு பள்ளியில் நடைபெற்ற துப்பாக்கிசூட்டில் மூவர் பலி, 13 பேர் காயம் என தகவல். தென்கிழக்கு பிரேசில் நாட்டில் உள்ள எஸ்பிரிடோ சான்டோ மாகாணத்தில், தலைநகர் விடோரியாவில் இருந்து 50 மைல்கள் வடக்கே அராகுரூஸ் என்ற சிறிய நகரில் குண்டு துளைக்காத ராணுவ உடை மற்றும் முகமூடி அணிந்து வந்த ஒருவர் இரண்டு பள்ளிகளில் திடீரென புகுந்து துப்பாக்கிசூடு நடத்தியுள்ளார். அராக்ரூஸில் ஒரே தெருவில் அமைந்துள்ள தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி மாணவர்களைக் கொண்ட […]