நெல்லை மாவட்டம் வள்ளியூரில் நடைபெற்ற இந்திய மருத்துவக் கழகத்தின் கிளை திறப்பு விழா நிகழ்ச்சியில் அதன் தமிழக மருத்துவக் கல்லூரி பயிற்சி கழக செயலாளர் அன்புராஜன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கு பல்வேறு முன்னேற்பாடுகளைச் செய்துள்ளதாகக் கூறினார். அதே சமயம் இந்தியாவின் வெப்ப நிலை காரணமாக கொரோனா வைரஸ் பரவுவதற்கு வாய்ப்பு இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.