‘மூளையை உண்ணும் அமீபா’வால் தென் கொரியாவில் முதல் நபர் உயிரிழந்துள்ளார். நெக்லேரியா ஃபோலேரி நோய்த்தொற்று பொதுவாக ‘மூளையை உண்ணும் அமீபா’ என்று குறிப்பிடப்படும் இந்த நோய்க்கு தென்கொரியாவில் முதல் முறையாக இறப்பு குறித்து பதிவாகியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். நோயினால் பாதிக்கப்பட்ட 50 வயதான அந்த நபர் தாய்லாந்தில் இருந்து திரும்பிய பிறகு, அரிதான இந்த நோய்க்கான அறிகுறிகள் தோன்றிய 10 நாட்கள் கழித்து, உயிரிழந்துள்ளதாக கொரியா நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நிறுவனம் (KDCA) உறுதிப்படுத்தியது. […]