தேசிய குத்துச்சண்டை போட்டியில், தங்கம் வென்ற வாலிபர் உட்பட மூன்றுபேரை, வழிப்பறி வழக்கில், திண்டுக்கல் காவல்துறையினர் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டம், கொடை ரோடு நிலக்கோட்டை அருகே வத்தலகுண்டில் இருசக்கர வாகன ஓட்டிகளிடம், அடிக்கடி வழிப்பறிகள் நடந்த வண்ணம் இருந்தன. இதனையடுத்து இது தொடர்பாக, அரசராஜன், (19) கதிரேசபிரபு, (20), மற்றும் தேசிய குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்ற, பாலமுருகன், 22, ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதி, பி.எஸ்சி., பட்டதாரியான பாலமுருகன், மஹாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் பெற்றோருடன் […]