ஆழ்துளை கிணறுகள் கணக்கிடப்பட்டு உடனடியாக மூட நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். திருச்சியில் உள்ள மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுபட்டியில் வீட்டின் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த 2 வயது சிறுவன் சுஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்தான். சிறுவனை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த குழந்தை சுர்ஜித்தின் குடும்பத்திற்கு துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆறுதல் தெரிவித்தார். இதன் பின்னர் அவர் கூறுகையில்,தமிழகத்தில் பயன்படுத்தப்படாத ஆழ்துளை கிணறுகள் […]