செய்ப்பூர் : ராஜஸ்தானின் தௌசா மாவட்டத்தின், பாண்டிகுய் பகுதியில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த இரண்டு வயது சிறுமி, அருகில் இருந்த 35 அடி மூடப்படாத ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துள்ளது. இதையடுத்து, போலீசாருக்கு தகவல் தெரிவித்ததும் மீட்புப்படையினரை வரவைத்து மீட்பு பணியை துரித படுத்தினர். ஆனால், மழை காரணமாக, மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்பட்டது. இருந்தாலும், தீயணைப்பு மற்றும் மீட்புப்படையினர் குழந்தையை மீட்கும் முயற்சியில் கடந்த 18 மணி நேரமாக ஈடுபட்டனர். சிறுமியை மீட்கும் முயற்சி […]
மத்திய பிரதேசத்தில் 55 அடி ஆழ்துளை கிணற்றில் இருந்து 8 வயது சிறுவன் 4 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டான். மத்திய பிரதேசத்தில் உள்ள பெதுல் கிராமத்தில் பெற்றோர்களுடன் வசித்து வந்த சிறுவன் தன்மய் சாஹு, கடந்த செய்வாய் கிழமை அவனது கிராமத்தில் விளையாடிக்கொண்டிருக்கும் பொது அங்கிருந்த ஆழ்துளை கிணற்றில் விழுந்துள்ளான். 400 அடி ஆழமுள்ள இந்த கிணற்றில் 55 அடி ஆழத்தில் சிக்கிக்கொண்டான். தகவல் தெரிந்து வந்த ஊர்காவல் படையினர் மற்றும் உள்ளூர் காவல் துறையினர் சிறுவனை […]
சத்தீஸ்கரில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை சுமார் 100 மணிநேர போராட்டத்துக்கு பிறகு வெற்றிகரமாக மீட்டனர். சத்தீஸ்கார் மாநிலம் ஜான்ஜீர் சம்பா மாவட்டம் மால்காரோடா அருகே உள்ள பிக்ரிட் கிராமத்தை சேர்ந்த லாலா ராம் சாகு என்பவற்றின் 11 வயது மகன் ராகுல் சாகு, கடந்த ஜூன் 10ம் தேதி மதியம் ஆழ்துளை கிணறு (போர்வெல்) அருகே சென்றே போது எதிர்பாராத விதமாக தவறி அதில் விழுந்தார். இதனிடையே, சிறுவனின் தந்தை லாலாராம் சாகு தனது வீட்டின் […]
மத்திய பிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 4 வயது குழந்தையை மீட்கும் பணி தீவிரம் அடைந்துள்ளது. சிறுவர்களின் ஆழ்துளை கிணறு மரணங்கள் அதிகரித்து வரும் நிலையில், மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள நிவாரி எனும் மாவட்டத்தில் நேற்று ஹரிகிருஷ்ணன் என்பவரால் அவரது வயலில் தோண்டப்பட்டிருந்த 200 அடி நீளமுள்ள ஆழ்துளைக்கிணற்றில் அவரது 4 வயது மகன் மூடப்பட்டிருந்த இரும்பு சட்டியை அகற்றி விளையாடிய போது எதிர்ப்பாராத விதமாக அதற்குள் தவறி விழுந்துவிட்டார். இந்நிலையில், தீயணைப்பு துறையினருக்கு இது […]
200 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 4 வயது சிறுவனை காப்பாற்றும் முயற்சியில் மஹாராஷ்டிரா மீட்புக்குழு ராணுவம். இந்தியாவில் ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழக்கக்கூடிய சிறுவர்களின் மரணம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு தான் செல்கிறது. மிக பெரிய தாக்கத்தை தந்த சுஜித்தின் மரணத்திற்கு பின்பும்கூட பல இடங்களில் கவனக்குறைவால் குழந்தைகள் விழுந்து உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், தற்பொழுது மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நிவாரி எனும் மாவட்டத்தில் பர்கோ பூஜோர்க் எனும் கிராமத்தில் வாசிக்க கூடிய […]
சிறு குறு விவசாயிகளுக்கு போர்வெல் அமைத்து தரப்படும் என ஆந்திரா முதல்வர் தெரிவித்துள்ளார். ஆந்திர முதல்வர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி பிரஜா சங்கல்ப் யாத்திரை எனும் 3600 கி.மீ யாத்திரையை மேற்கொள்வதுண்டு. இந்த யாத்திரையின் போது சிறு குறு விவசாயிகளுக்கு போர்வெல் அமைத்து தருவது தனது வாக்குறுதிகளில் ஒன்றாக உள்ளது எனவும், விரைவில் அமைத்து கொடுக்க அவர் வலியுறுத்தியுள்ளதாகவும் தகவல் மற்றும் மக்கள் தொடர்பு ஆணையர் தும்மா விஜய் குமார் அவர்கள் தெரிவித்துள்ளார். இந்த போர்வெல் […]
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மேதக் எனும் மாவட்டத்தில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் உயிரிழந்துள்ளார். தெலங்கானா மாநிலத்தில் உள்ள மேதக் எனும் மாவட்டம் பப்பன்னாபேட் மண்டலில் வசித்து வரும் கோவர்தன் என்பவருக்கு சாய் வர்தன் எனும் மூன்று வயது குழந்தை ஒன்று உள்ளது. தனது தாத்தாவுடன் நேற்று விவசாய நிலத்தில் நடந்து சென்றடுகொண்டுள்ளார் சிறுவன். அப்பொழுது அங்கிருந்த மூடப்படாத 25 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றில் தவறுதலாக விழுந்துள்ளார். உடனடியாக மீட்பு நடவடிக்கை மேற்கொண்டாலும், […]
தெலுங்கானாவில் விவசாய நிலத்தில் தோண்டப்பட்ட 120 அடி ஆழ்துளைகிணற்றில் விழுந்த குழந்தை பலி. தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மேடக் மாவட்டத்தில் உள்ள பாப்பனபெட் என்ற கிராமத்தில் விவசாய பயன்பாட்டிற்காக ஆழ்த்துளை கிணறு அமைக்க 120 அடி ஆழத்திற்கு தோண்டியுள்ளனர் .நேற்று மாலை 5 மணி அளவில் அதன் அருகில் நின்றுகொண்டிருந்த சாய் வர்தன் என்ற மூன்று வயது சிறுவன் தவறி விழுந்துவிட்டான். குழந்தை சிக்கியிருக்கும் ஆழ்துளை கிணற்றுக்கு தொடர்ந்து ஆக்ஸிஜன் செலுத்தப்பட்டு,கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வந்தது .குழந்தையை […]
தெலுங்கானா வை சேர்ந்த 3 வயது குழந்தை விவசாய நிலத்தில் தோண்டப்பட்ட 120 அடி ஆழ்த்துளை கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடி வருகிறது. தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மேடக் மாவட்டத்தில் உள்ள பாப்பனபெட் என்ற கிராமத்தில் விவசாய பயன்பாட்டிற்காக ஆழ்த்துளை கிணறு அமைக்க 120 அடி ஆழத்திற்கு தோண்டியுள்ளனர் .இன்று மாலை 5 மணி அளவில் அதன் அருகில் விளையாடிக்கொண்டிருந்த சாய் வர்தன் என்ற மூன்று வயது சிறுவன் தவறி விழுந்துவிட்டான். குழந்தை சிக்கியிருக்கும் ஆழ்த்துளை கிணற்றுக்கு […]
ஆழ்துளை கிணறு மரணங்களை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என்று பதில் அளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த ஆண்டு தமிழகத்தை உலுக்கிய சம்பவங்களில் ஓன்று திருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டுபட்டியில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து 2 வயது சிறுவன் சுஜீத் உயிரிழந்த சம்பவம் ஆகும்.இந்த சம்பவத்தை தொடர்ந்து வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.அவரது வழக்கில்,கடந்த 2010 -ஆம்ஆண்டு உச்சநீதிமன்றம் குழந்தைகளை மீட்கும் நடவடிக்கைகள் […]
திருச்சி மணப்பாறை பகுதியில், ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த குழந்தை சுஜித்தின் சோக வடுக்கள் இன்னும் மறையாத நிலையில், நேற்று காலை சுமார் 9 மணியளவில், மகாராஷ்டிராவில் நாசிக் அருகே உள்ள கல்வான் கிராமத்தில் 6 வயதான ரித்தீஷ் ஜீவன்சிங் என்ற சிறுவன் 300 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துள்ளான். இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் குழந்தையை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். சுமார் […]
ஹரியானாவில் 5 வயது சிறுமி ஆழ்துளை கிணற்றில் விழுந்த நிலையில் மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த சில தினங்களாக தமிழகத்தை உலுக்கிய சம்பவம் ஆழ்துளை கிணற்றில் விழுந்து 2 வயது சிறுவன் சுஜித் உயிரிழந்தது தான்.இந்த சம்பவத்திற்கு பிறகு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஹாரியானா மாநிலத்தில் தமிழகத்தில் நடந்த சம்பவம் போன்று நிகழ்ந்துள்ளது.நேற்று ஹாரியானா மாநிலத்தில் ஹர்சிங்புரா என்ற கிராமத்தில் 50 அடி ஆழமுடைய ஆழ்துளை கிணற்றில் 5 வயது சிறுமி […]
சுர்ஜித் ஆழ்த்துளை கிணற்றில் விழுந்து உயிரழந்ததுக்கு பிறகு தமிழகம் மற்றும் புதுவையில் ஆழ்த்துளை கிணறுகளை மூடும் பனி தீவிரமாக நடந்து வருகிறது .சுஜித்தின் இறப்பு நமக்கு அலட்சியம் என்னும் பழக்கம் நம்மை சூழ்ந்துள்ளதை உணர்த்தி விட்டு சென்றிருக்கிறது. இதனிடையே புதுச்சேரியில் பயனில்லாமல் கிடக்கும் ஆழ்த்துளை கிணறுகளை மூடாவிட்டால் நில உரிமையாளர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று புதுவை அரசு அறிவித்துள்ளது .சட்டங்கள் கடுமையானால் தான் நம்மிடத்தில் உள்ள இந்த அலட்சியம் போகும்.நம் வீட்டருகே உள்ள பயன்பாடற்ற ஆழ்த்துளை கிணறுகளை […]
ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுர்ஜித்தை மேலே கொண்டுவரும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது. திருச்சியில் நடுகாட்டுபட்டி என்ற கிராமத்தில் நேற்று சுர்ஜித் என்ற சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்தார்.ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை தொடர்ந்து மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சுர்ஜித்தை மேலே கொண்டுவரும் பணி தீவிரமாக நடைபெற்றுவருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.21 மணி நேரத்திற்கும் மேலாக மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.