இந்தியா மற்றும் சீனா இடையிலான எல்லைப் பிரச்னையை, இரு நாடுகளும் சேர்ந்து சுமுகமாக தீர்த்துக் கொள்ளும் என, நம்புவதாகவும் மேலும் தேவைப்பட்டால் அந்த பிரச்சனைகளை தீர்க்க தான் உதவ தயாராக இருப்பதாகவும், அமெரிக்க அதிபர் டிரம்ப், மீண்டும் தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் சீனா இடையே, கிழக்கு லடாக் பகுதியில், ஐந்து மாதங்களாக, மோதல் போக்கு நிலவி வருகிறது. எல்லையில் அமைதியை ஏற்படுத்த, இருநாட்டு ராணுவ உயர் அதிகாரிகளின் அமைதி பேச்சு, பல்வேறு கட்டங்களாக நடந்து வருகின்றன. சமீபத்தில் […]
இந்திய எல்லையின் காஷ்மீரின் லடாக் பகுதியில் சீன ராணுவம் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறது. இதற்கு நம் வீரர்கள் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். இதையடுத்து எல்லையில் இரு நாடுகளும் படைகளை குவித்துள்ளதால் பதற்றம் நிலவுகிறது. பிரச்னைக்கு சுமுக தீர்வு காண இரு நாட்டு ராணுவ மற்றும் வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இரு நாட்டு ராணுவ அதிகாரிகளுக்கு இடையேயான ஆறாவது சுற்றுப் பேச்சுவார்த்தை லடாக் அருகே சீன எல்லைக்குள் உள்ள […]
இந்திய-சீன எல்லை விவகாரத்தில் அரசு அமைதி காப்பது பதற்றத்தை உருவாக்குகிறது என காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி குற்றம் சாற்றினார். இந்தியா மற்றும் சீன எல்லைப்பகுதிகளில், கடந்த சில நாட்களாகவே பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. அங்கு போர் நடைபெற வாய்ப்புள்ளதால், இரு நாடுகளும் தங்களது இராணுவப்படையை தயார் நிலையில் வைத்துள்ளது. இந்நிலையில், இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டார். அதில் அவர், இந்திய-சீன எல்லை விவகாரத்தில் அரசு […]