தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், வெளியிடங்களுக்கு சென்றாலே அவருக்கு பொன்னாடைகள், பூங்கொத்துகள், புத்தகங்கள் வழங்கப்படுவதுண்டு. அந்த வகையில், முதல்வர் அவர்கள் ஆட்சிக்கு வந்த சில நாட்களில் தனக்கு பொன்னாடை போர்த்துவதை விட, புத்தகங்களை வழங்குமாறு அறிவுறுத்தி இருந்தார். அதன்படி முதல்வர் அவரகள், அரசு நிகழ்ச்சி, நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு சென்றாலே அவருக்கு பெரும்பாலான அரசியல் தலைவர்கள் புத்தகங்களை கொடுத்து வரவேற்பது வழக்கமாக உள்ளது. பிரதமராவதற்கு அனைத்து தகுதியும், வல்லமையும் ஈபிஎஸ் இடம் உள்ளது – முன்னாள் […]
வரும் திங்கட்கிழமை முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், அன்றைய தினமே மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்க ஏற்பாடு. தமிழகத்தில் 1 முதல் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிந்து, வரும் 13-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ளது. 13-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், திருவள்ளூர் மாவட்டம் புழல் ஒன்றியம் அழிஞ்சிவாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு, எண்ணும் எழுத்தும் திட்டத்தையும் துவக்கி வைக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், […]
40 கல்லூரி விடுதிகளுக்கு போட்டி தேர்வுகளுக்கான புத்தகங்கள் வழங்க ரூ.10 லட்சம் செலவில் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியீடு. முன்னதாக நடைபெற்ற 2021-2022 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையின் போது “கல்லூரி விடுதிகளில் தங்கி பயின்று வரும் மாணவ, மாணவியர் வேலை வாய்ப்புக்கான போட்டி தேர்வுகளில் பங்கேற்பதை ஊக்கப்படுத்தும் பொருட்டு, விடுபட்டுள்ள 40 பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் கல்லூரி விடுதிகளுக்கு, போட்டி தேர்வுகளுக்கான புத்தகங்கள் 10 இலட்சம் ரூபாய் செலவில் வழங்கப்படும்” […]
பாடபுத்தகங்களில் உள்ள தலைவர்களின் சாதி பெயர்களை நீக்குகிற முயற்சியில் ஈடுபடுவது வரவேற்கத்தக்கது. தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கான பாடப்புத்தகங்களை தமிழ்நாடு அரசு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் அச்சிட்டு வருகின்றன. இந்நிலையில்,பள்ளிப் பாடப்புத்தகங்களில் உள்ள தலைவர்களின் பெயர்களுக்கு பின்னால் உள்ள சாதிப்பெயர் நீக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அவர்கள், திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையிலான அரசு […]
என்னை பார்க்க வருபவர்கள் பொன்னாடை போர்த்துவதை தவிர்த்து புத்தகங்கள் வழங்குங்கள் என அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவுறுத்தியுள்ளார். பொதுவாக அரசியல் தலைவர்களை சந்திக்க செல்பவர்கள், அவர்களுக்கு பொன்னாடை போர்த்துவது, பூங்கொத்து கொடுப்பது வழக்கம். இந்நிலையில், தமிழ்நாடு தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோ ராஜ் அவர்கள், தனது ட்விட்டர் பக்கத்தில், ‘குமரி மாவட்டத்தில் நூலகங்களுக்கு புத்தகங்கள் தேவைப்படுகிறது.பொதுவாகவே நூலகங்களுக்கு புத்தகங்கள் கொடுப்பது வழக்கம்,என்னை சந்திக்க வரும் நண்பர்கள் பொன்னாடைகள் அளிப்பதை தவிர்த்து ஏழை மாணவர்கள் பயன்படும் படி […]
உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் யோகா குரு ராம்தேவ் ஆகியோர் எழுதிய புத்தகங்கள் அம்மாநிலத்திலுள்ள சவுத்ரி சரண் சிங் பல்கலைக்கழகத்தில் பாடத்திட்டத்துடன் சேர்க்கப்பட்டுள்ளது சர்சையை கிளப்பியுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலம் மீரட் நகரிலுள்ள சவுத்ரி சரண் சிங் பல்கலைகழகத்தில் புதிய கல்விக் கொள்கையின் கீழ் யுஜிசி ஒரு புதிய பாடத் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதன்படி உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் எழுதிய ‘ஹத்தியோகா கா ஸ்வரூப் வா சாத்னா’ மற்றும் ராம்தேவின் ‘யோக சாத்னா வா […]
நான் தலைமைச் செயலாளராக பணியாற்றும் வரை என் நூல்களை வாங்க வேண்டாம் என்று பள்ளிக்கல்வித்துறைக்கு வெ.இறையன்பு வேண்டுகோள். இதுதொடர்பாக பள்ளிக் கல்வித்துறைக்கு தமிழக தலைமை செயலாளர் வெ.இறையன்பு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், நான் பணி நேரம் முடிந்த பின்பும், விடுமுறை நாட்களிலும் எனக்குத் தெரிந்த தகவல்களை வைத்தும், என் அனுபவங்களைத் தொகுத்தும் சில நூல்களை எழுதி வந்தேன். அவற்றில் உள்ள பொருண்மை, கடற்கரையில் கண்டெடுத்த சிப்பியையே முத்தாகக் கருதி சேகரிக்கும் சிறுவனின் உற்சாகத்துடன் எழுதப்பட்டவை. இப்போதுள்ள […]
மழையால் சிதைந்த புத்தகங்களை பார்த்து கதறி அழுத மாணவிக்கு கிடைத்த உதவி. சட்டீஸ்கர் மாநிலம், பிஜப்பூர் என்ற மாவட்டம் மாவோயிஸ்டுகளால் அதிகம் பாதிப்புக்கு உள்ளான ஒரு பகுதி ஆகும். கோமலா என்ற கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின சிறுமியான அஞ்சலி, அங்கு உள்ள பள்ளியில் படித்து வந்துள்ளார். இந்த பகுதியில் பெண் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதை பெரிய விஷயம். ஆனால் படிப்பின் மீது ஆர்வம் உள்ள அந்த சிறுமி ஆர்வத்துடன் சென்று பள்ளிக்கு படித்து வந்துள்ளார். இந்த சிறுமியின் […]
10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் விநியோகம். தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், இந்த வைரஸ் தொற்றால் கல்வி நிறுவனங்கள் அனைத்துமே மூடப்பட்டுள்ள நிலையில், மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் எடுக்கப்படுகிறது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் விநியோகம் செய்யப்படுகிறது. அந்தந்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் […]
இம்மாத இறுதிக்குள் பள்ளிகளுக்கு பாடபுத்தக்கங்கள் அனுப்பப்படும். தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வைரஸ் பரவலால், அனைத்து பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் கூறுகையில், இம்மாத இறுதிக்குள் அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் 1-12ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வழங்கப்படும் என்றும், நாட்கள் குறைவாக உள்ளதால் முக்கிய பாடங்களை மட்டும் படிக்க […]
ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அரியலூரில் நடைபெற்ற புத்தக கண்காட்சியில் கலந்து கொண்டு, குத்துவிளக்கேற்றி துவங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், புத்தகங்களுக்காக சிறிது நேரத்தை அனைவரும் செலவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மேலும் அவர் பேசுகையில், வீட்டிலும் சிறிய நூலகம் வைத்திருக்க வேண்டும் என்றும், இதுபோன்ற அறிய புத்தக திருவிழாக்களை அனைவரும் பயானுள்ள வகையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இளையவர்கள் முதல் பெரியவர்கள் வரை, உயிரை கொல்லும் என அறிந்தும் அனைவரும் பின்பற்றும் ஒரு பழக்கம், புகைப்பழக்கமாகும். தற்காலத்தில் ஆண்களும் பெண்களும் புகை, மது போன்ற பலதரப்பட்ட போதை பழக்கங்களுக்கு அடிமையாகி வருகின்றனர்; இந்த இளைய தலைமுறையினர் தான் நாளைய தலைவர்கள். புவியில் காணப்படும் முக்கிய போதை பழக்கங்களில் ஒன்றான புகை பிடிக்கும் பழக்கம், மிகவும் மோசமானது; இந்த புகை பழக்கம் தன்னையும் கொன்று, உடன் இருப்பவரையும் கொல்ல வல்லது. அப்படிப்பட்ட மோசமான, உயிரை கொல்லும் புகை […]
உலகில் மற்ற நிறுவனங்களை பின்னுக்கு தள்ளிவிட்டு முதல் இடத்தை சில ஆண்டுகளாக தக்க வைத்து கொண்டுள்ள கூகுளை பற்றி தெரியாதவரே கிடையாது. கூகுள் மக்களுக்கு வழங்கும் சேவைகள் பல. இதனை பல கோடி பேர் தினமும் பயன்படுத்தி வருகின்றனர். புதுசாக குழந்தை பெற்றேடுப்பது போல தனது புது புது தொழிற்நுட்பங்களை கூகுள் அவ்வப்போது ரிலீஸ் செய்து கொண்டே வருகிறது. அதே போன்று தற்போது கூகுள் மேப்பை அடிப்படையாக கொண்டு படிப்பாளிகளுக்கும், படைப்பாளிகளுக்கும் தற்போது ஒரு சேவை வந்துள்ளது. […]