சென்னையில் புத்தக கண்காட்சி நேற்று முன்தினம் (ஜனவரி 3) முதல் தொடங்கியது. இதில் அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என கலந்துகொண்டு வருகிறார்கள். அந்த வகையில், நேற்று நடந்த புத்தகக்காட்சியில் இசையமைப்பாளர் இளையராஜா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் கலந்துகொண்டார்கள். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இசையமைப்பாளர் இளையராஜா பல விஷயங்களை பேசியுள்ளார். நிகழ்ச்சியில் பேசிய இளையராஜா ” நான் என்னுடைய முதல் படத்திலேயே ஆண்டாள் பாடிய பாடலை இடம்பெறச் செய்த பாக்கியம் எனக்கு கிடைத்தது. […]