புதுடெல்லி: கடந்த ஒரு வாரமாக பல்வேறு இந்திய விமான நிறுவனங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வரும் நிலையில், இன்றும் பல விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, வெவ்வேறு இடங்களுக்குச் சென்ற 6 விஸ்தாரா விமானங்களுக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. விஸ்தாரா நிறுவனத்தின் மும்பையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் விமானம் உள்ளிட்ட 6 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. ஆறு விமானங்களின் பட்டியல் UK25 விமானம் (டெல்லி முதல் பிராங்பேர்ட்) UK106 விமானம் (சிங்கப்பூர் முதல் […]
சென்னை : தற்போது வெடிகுண்டு மிரட்டல்களானது, இ-மெயில், குறுஞ்செய்தி, தொலைபேசி என பல்வேறு வழிகளில் விமான நிலையம், பள்ளிகளுக்கு அவ்வப்போது வந்து கொண்டிருக்கிறது. அடிக்கடி இதுபோன்ற போலி மிரட்டல்கள் வந்தாலும், காவல்துறையினர் தொடர்ந்து உரிய சோதனை மேற்கொண்டு, விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் உள்ள கழிவறை பகுதியில் சக்திவாய்ந்த வெடிகுண்டு இருந்ததாக காவல்துறை கட்டுப்பட்டு அறைக்கு தொலைபேசி வாயிலாக குறுந்செய்தி வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வெடிகுண்டு மிரட்டல் செய்தியை […]
சென்னை : கடந்த 48 மணி நேரத்தில் இண்டிகோ, ஏர் இந்தியா மற்றும் ஆகாச ஏர் நிறுவனங்களின் 10-க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உத்தரகாண்ட்டில் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் பயணித்த ஹெலிகாப்டரும், பித்தோராகர் மாவட்டத்தில் அவசரமாக தற்போது தரையிறக்கப்பட்டுள்ளது. மேலும், மும்பையில் இருந்து டெல்லி சென்று கொண்டிருந்த இண்டிகோ விமானம் பாதுகாப்பு அச்சுறுத்தலால், அகமதாபாத்தில் தரையிறங்கியது. அந்த வகையில், டெலியில் இருந்து பெங்களூரு சென்று கொண்டிருந்தம் […]
சென்னை : திமுக அரசை கண்டித்து சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையத்திற்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். கடிதம் மூலம் ரயில் நிலையங்களுக்க வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்த செயலிழப்பு நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். எழும்பூர் ரயில் நிலையத்துக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட கடிதத்தில், “பாமகக்கு எதிராக திமுக செயல்படுவதாக” குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த சில நாள்களாகவே பள்ளிகள் மற்றும் விமான […]
ஏர் கனடா: கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூன்-5) அன்று டெல்லியில் இருந்து டொராண்டோவுக்குச் சென்று கொண்டிருந்த ஏர் கனடா விமானத்திற்கு (AC43) வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் மூலமாக வந்துள்ளது. நேற்று இரவு 10.50 மணியளவில் புறப்பட வேண்டிய இந்த ஏர் கனடா விமானதிற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தவுடன் அந்த விமானமும் தனிமைப்படுத்தப்பட்ட இடத்திற்கு கொண்டு செல்லபட்டது மேலும், அதிலிருந்த பயணிகளை பத்திரமாக மீட்டுள்ளனர். அதை தொடர்ந்து பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக உட்பட்டதுடன் பயணிகளையும் சோதனை செய்துள்ளனர். கடந்த […]
மும்பை: கடந்த மே 28ஆம் தேதி டெல்லியில் இருந்து வாரணாசி வரை சென்ற இண்டிகோ விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக போலி மின்னஞ்சல் முகவரி மூலமாக மிரட்டல் மெயில் வந்தது. அதனை தொடர்ந்து பயணிகள் அவசரகதவு வழியாக வெளியேற்றப்பட்டு விமானம் முழுக்க வெடிகுண்டு நிபுணர்களால் சோதனை செய்யப்பட்டது. இறுதியில் மிரட்டல் செய்தி போலி என தெரிவிக்கப்பட்டது தற்போது அதே போன்ற சம்பவம் மீண்டும் நிகழ்ந்துள்ளது. இன்று சென்னையில் இருந்து காலை 7 மணிக்கு மும்பை புறப்பட்ட இண்டிகோ விமானத்தில் […]
சென்னை: டெல்லி உள்துறை அமைச்சக அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. டெல்லியின் வடக்கு பிளாக்கில் உள்ள மத்திய உள்துறை அமைச்சக வளாகத்தில் வெடிகுண்டு இருப்பதாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மிரட்டல் கடிதம் மின்னஞ்சல் வாயிலாக கிடைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. உடனடியாக, சம்பவ இடத்திற்கு இரண்டு தீயணைப்பு வாகனங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. தற்போது பாதுகாப்பு அதிகாரிகள் உள்துறை அமைச்சக வளாகத்தில் தீவிர சோதனையை மேற்கொண்டுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.
Bomb Threats : இந்தியா முழுக்க13 விமான நிலையங்களுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. டெல்லி, உத்தரபிரதேசம், ராஜஸ்தான் ஜெய்ப்பூர், பீகார் , ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள 13 விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து நேற்று மாலை 3 மணி அளவில் மிரட்டல் செய்தி வந்துள்ளது. இ-மெயில் மூலமாக மத்திய பாதுகாப்பு படையினருக்கு (CSIF) இந்த மிரட்டல் வந்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து லக்னோவில் உள்ள சவுத்ரி சரண்சிங் சர்வதேச […]
Bomb Threat : டெல்லி, நொய்டாவில் 60க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து இமெயில் வந்துள்ளது. டெல்லி மற்றும் உ.பி நொய்டாவில் இதுவரை 60க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு (டெல்லியில் 60, நொய்டாவில் 1) வெடிகுண்டு மிரட்டல் விடுத்து இமெயில் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த மிரட்டல் இமெயில்களை தொடர்ந்து, டெல்லி போலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக பள்ளி மாணவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். பின்னர், வெடிகுண்டு தேடுதல் குழுவினர், வெடிகுண்டு மிரட்டல் விடுத்த அனைத்து பள்ளிகளிலும் தீவிர […]
Bomb Threat: கர்நாடக அரசுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. பெங்களூருவின் முக்கிய இடங்களில் உள்ள உணவகங்கள், கோயில்கள், பேருந்துகள் போன்றவற்றில் வெடிகுண்டு வெடிக்கும் அந்த மின்னஞ்சலில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. READ MORE – உயர்நீதிமன்ற நீதிபதி ராஜினாமா..! பாஜகவில் இணையவுள்ளதாக அறிவிப்பு மேலும் அதில், குண்டுவெடிப்பைத் தவிர்க்க ரூ.20 கோடி வேண்டும் என்று கூறப்பட்டிருந்ததாக சொல்லப்படுகிறது. முதலமைச்சர், உள்துறை அமைச்சர், காவல்துறை தலைவர் ஆகியோருக்கு மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது, கர்நாடக போலீஸார் […]
Bomb Threat: சென்னை மற்றும் கோவை மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை கெருகம்பாக்கத்தில் உள்ள தி பிஎஸ்பிபி என்ற தனியார் பள்ளிக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மாணவர்களை வீட்டுக்கு அழைத்துச் செல்ல பெற்றோர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளது. READ MORE – ஒரே இமெயில் ID மூலம் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்.! சென்னை காவல் ஆணையர் விளக்கம்.! இதனையடுத்து, மாணவர்கள் விரைவாக […]
டெல்லி உயர்நீதிமன்ற வளாகத்தில் இன்று மிக பெரிய அளவில் வெடிகுண்டு வெடிக்கும் என மிரட்டல் வந்துள்ளது. இதனால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. டெல்லி உயர்நீதிமன்ற தலைமை பதிவாளரின் மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு இ- மெயில் வந்துள்ளது. அதில், இன்று (பிப்ரவரி 15) ஆம் தேதியன்று டெல்லி உயர்நீதிமன்ற வளாகத்தில் மிக பெரிய குண்டு வெடிக்கும் என்றும், எவ்வளவு பாதுகாப்பு அமைத்தாலும், அனைத்து அமைச்சர்களையும் வரவழைத்தாலும், அனைவரையும் வெடிகுண்டு வைத்து தர்ப்போம் என அதில் குறிப்பிடப்பட்டு இருந்துள்ளது. மீண்டும் பேச்சுவார்த்தை […]
இந்தியாவில் நெல்லை உள்ளிட்ட உள்ள 26 அறிவியல் மையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் தமிழ்நாட்டில் நெல்லையில் மட்டுமே அறிவியல் மையம் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நெல்லையிலுள்ள அறிவியல் மையத்திற்கும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கொல்கத்தாவில் உள்ள அறிவியல் மையத்தின் அலுவலக மின்னஞ்சலுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள் தீவிரமாக சோதனை செய்து வருகிறார்கள். வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, பொதுமக்கள் பார்வைக்கு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. வளாகத்தின் […]
இந்திய வான்வெளியில் நுழைந்த ஈரான் விமானத்தில் வெடிகுண்டு இருப்பது போன்ற எச்சரிக்கை தகவல் கிடைத்தது. இதனால் இந்திய ஜெட் விமானங்களால் அந்த ஈரான் விமானம் வானில் துரத்தப்பட்டது. ஈரானை பூர்வீகமாகக் கொண்ட விமானம் ஒன்று அக்டோபர் 3ஆம் (இன்று) தேதி டெல்லியை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது, அதில் வெடிகுண்டு இருப்பதாக டெல்லியில் உள்ள பாதுகாப்பு நிறுவனங்களுக்கு கிடைத்த தகவலின் படி, ஈரான் விமானம் டெல்லியில் தரையிறங்க அனுமதி வழங்கப்படவில்லை. அடுத்ததாக, பஞ்சாப் மற்றும் ஜோத்பூர் விமான […]
அமிர்தசரஸ் பள்ளியில் வெடிகுண்டு மிரட்டல் வதந்தியை பரப்பிய 9ஆம் வகுப்பு 3 மாணவர்கள். பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள டிஏவி பப்ளிக் பள்ளியில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட வதந்தியை 9 ஆம் வகுப்பு மாணவர்கள் மூவர் பரப்பியதாக போலீசார் தெரிவித்தனர். வதந்திகள் கண்டுபிடிக்கப்பட்ட சில மணிநேரங்களில் அந்த மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பாக இன்ஸ்டாகிராமில் வதந்தி பரவிய நிலையில், அதே பள்ளியில் துப்பாக்கிச் சூடு நடத்துவது தொடர்பான மற்றொரு வதந்தி வாட்ஸ்அப்பில் பகிரப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
உதயநிதி படத்தில் தனக்கு ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதற்காக முதல்வர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல். நேற்று சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தொலைபேசியில் பேசினார். அப்போது நாளை முதல்வர் வீட்டிற்கு வெடிகுண்டு வைக்கப் போவதாக மிரட்டி இணைப்பை துண்டித்து விட்டார். இதைத்தொடர்ந்து, போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் வண்டலூரை அடுத்த மாம்பாக்கம் பகுதியில் அந்த அடையாளத்தை நபரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் பெயர் பழனிவேல் என்பதும் […]
நியூசிலாந்து நாட்டின் பெண்கள் கிரிக்கெட் அணிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணிக்கு இடையே 3-வது ஒரு நாள் போட்டி தொடர் நடைபெற இருந்த நிலையில், நியூசிலாந்து அணி நிர்வாக உறுப்பினர் ஒருவருக்கு மிரட்டல் செய்தி ஒன்று வந்துள்ளது. இதனை நியூசிலாந்து அணியினரும் உறுதி செய்துள்ளனர். அதில், நியூசிலாந்து வீராங்கனைகள் தங்கியிருக்கக் கூடிய ஹோட்டலில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், அதே போல நியூசிலாந்து அணி நாடு திரும்பும் பொழுது அவர்கள் செல்லக்கூடிய விமானத்தில் […]
சென்னையில் 6 ஹோட்டல்களில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தேர்வு முகாம் நடைபெறும் நிலையில் வெடிகுண்டு மிரட்டல். சென்னையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகாம்கள் 6 ஹோட்டல்களில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் ஹோட்டல்களில் வெடிகுண்டு வெடிக்கப்போவதாக ஒரு ஹோட்டலின் மின்னஞ்சலுக்கு மிரட்டல் வந்துள்ளது. இந்த வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து, சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது ஆனால் காவல்துறை சோதனையில் இது புரளி என தெரிய வந்திருக்கிறது. காவல் கட்டுப்பாட்டு அறைக்கு பேசிய அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டி உள்ளார். இதைத்தொடர்ந்து விஜயகாந்த் வீட்டிற்கு காவல்துறை மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் நேரடியாக சென்று சோதனை நடத்தினர். சோதனையில் எந்த பொருளும் சிக்கவில்லை. இதனால், வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது. இந்த வெடிகுண்டு மிரட்டல் […]
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், விமான நிலையம், டிஜிபி அலுவலகம், கொச்சி விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மார்ச் 1ம் தேதி குண்டு வெடிக்கும் என்று சென்ட்ரல் ரயில் நிலைய அலுவலகத்திற்கு வந்த மர்ம கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.