மும்பையின் வெர்சோவா கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணியில் பாலிவுட் மற்றும் சின்னத்திரை நட்சத்திரங்கள் ஈடுபட்டனர். நடிகைகள் சையாமி கெர், அபிகைல் பாண்டே, அனுஷா டான்ட்ரேகர் மற்றும் ஏராளமான சின்னத்திரை கலைஞர்கள், கடற்கரையில் வீசப்பட்ட பிளாஸ்டிக், குப்பைகளை கூடைகளில் அள்ளினர். நான்கு அடி உயரத்திற்கு பிளாஸ்டிக் குப்பைகள் குவிக்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர். அண்மையில், ஐ.நா.சபையின் கோரிக்கையை ஏற்று நடிகர் அமிதாப் பச்சன் கடற்கரையை சுத்தம் செய்து இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்