பீகாரில் பாய்லர் வெடித்து 6 பேர் உயிரிழப்பு!

பீகார் மாநிலம் முசாபர்பூரில் உள்ள தொழிற்சாலையில் கொதிகலன் வெடித்ததில் 6 பேர் உயிரிழந்தனர். பீகார் மாநிலம் முஸாபர்பூரில் நூடுல்ஸ் தயாரிப்பு ஆலையில் கொதிகலன் (பாய்லர்) வெடித்து 6 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாகவும், காயம் அடைந்த மேலும் 6 தொழிலாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளதாகவும் அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளது. நூடுல்ஸ் தொழிற்சாலையில் இன்று காலை 10 மணியளவில் விபத்து ஏற்பட்டதாக மாவட்ட ஆட்சியர் பிரவன் குமார் தெரிவித்தார்.

கராச்சியில் பாய்லர் வெடித்ததில் 8 பேர் உயிரிழப்பு.. 30 பேர் காயம்..!

பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள ஐஸ்கட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலை ஏராளமான தொழிலாளர்கள் வேலை பார்த்து வந்தனர். நேற்று மாலை  வழக்கம்போல்வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது திடீரென  தொழிற்சாலைக்குள் இருந்த பாய்லர் ஒன்று வெடித்து சிதறியது. பாய்லர் வெடித்து சிதறியதில் தொழிற்சாலை கட்டிடம் தரைமட்டமானது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இடிபாடுகளில் சிக்கி இருந்த 30 பேரை படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடந்து … Read more

NLC அனல்மின் நிலைய தீ விபத்து.. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6 அக உயர்வு!

NLC அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6 ஆக உயர்வு. நெய்வேலி NLC அனல் மின் நிலையத்தில் இரண்டாவது அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 15-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ள நிலையில், தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். அதில் 5 பேர் உயிரிழந்த நிலையில், தற்பொழுது உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது. மேலும், … Read more

#BREAKING: நெய்வேலி என்.எல்.சி யில் பாய்லர் வெடித்து விபத்து.!

தமிழகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களின் மின் தேவையை பூர்த்தி செய்ய கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலியில் என்.எல்.சி. அனல் மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று நெய்வேலி என்.எல்.சி யில் உள்ள 2-வது அனல்மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து பகுதியில் சிக்கி உள்ள தொழிலாளர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு முன் கடந்த மே மாதம் ஏற்பட்ட விபத்தில் உயிரிழப்புகள்  ஏற்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.