காற்றின் தரம் குறித்து சென்னையின் 15 இடங்களில் ஆய்வு நடந்து வருகிறது என மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், தியாகராயநகர், அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் காற்று மாசு அதிகரித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. போகி பண்டிகையை முன்னிட்டு தென் சென்னையில் பல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 10 மணிநேரம் வரை புகைமூட்டம் நீடிக்கும் என மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே இன்று அதிகாலையில் போகி பண்டிகையையொட்டி சென்னையில் விமானங்கள் ரத்தானது .அதேபோல் வாகன ஓட்டிகளும் கடுமையான சிரமத்திற்கு உள்ளனார்கள் […]