இந்தோனேசியாவில் விபத்துக்குள்ளான விமானத்தின் இரண்டு கருப்புப் பெட்டிகள் கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இந்தோனேசியா தலைநகர் ஜகார்தாவில் இருந்து போன்டினாக்கை நோக்கி ஸ்ரீவிஜயா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான “போயிங் 737” மாடல், SJ182 என்று அழைக்கப்படும் விமானம், 62 பயணிகளுடன் ஜகார்தாவில் இருந்து புறப்பட்ட விமானம், 4 ஆம் நிமிடத்தில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. ஜாவா கடற்பரப்பில் விழுந்ததாக சந்தேக்கம் எழுந்ததை தொடர்ந்து தேடும் பணியில் மீட்புப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது, ஜாவா கடற்பகுதியில் மீன்பிடிக்க […]