உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற வரும் உலக ஆணழகன் போட்டியின் ஜூனியர் பிரிவில் தமிழக வீரர் சுரேஷ் தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார்.இவரைத்தொடர்ந்து ஜூனியர் பிரிவில் தமிழகத்தை சேர்ந்த மற்றொரு வீரர் விக்னேஷ் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார். சீனியர் பிரிவில் தமிழகத்தை சேர்ந்த பெஞ்சமின் ஜெரால்டு வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார்.12 வது WBPF உலக சாம்பியன்ஷிப் 2021 போட்டி அக்டோபர் 1 முதல் 07 வரை உஸ்பெகிஸ்தான் நாட்டில் நடைபெற்று வருகிறது.
ஆசிய மற்றும் சர்வதேச அளவிலான ஆணழகன் போட்டியில் தங்கம் வென்று, மத்திய அரசின் அர்ஜுனா விருது பெற்ற பாஸ்கரன். தமிழக அரசு அரசு சார்பாக ரூ.25 லட்சம் ஊக்கத்தொகை அறிவித்துள்ளது. சென்னை கே.கே. நகரை சேர்ந்த பாஸ்கரன் கடந்த 2018-ம் ஆண்டு புனேயில் நடைபெற்ற ஆசிய அளவிலான பாடிபில்டிங் போட்டி மற்றும் தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச அளவிலான பாடிபில்டிங் போட்டியில் தங்கம் வென்று தமிழ்நாட்டிற்கும், இந்தியாவுக்கும் பெருமை சேர்த்தார். இந்நிலையில், நடப்பு ஆண்டில் மத்திய அரசு அவருக்கு […]