போடிநாயக்கனுர் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடுவதற்காக மூன்றாவது முறையாக வேட்பு மனு தாக்கல் செய்த ஓ.பன்னீர்செல்வம். தேனி மாவட்டம் போடிநாயக்கனுர் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடுவதற்காக காளியம்மன் கோவிலில் வழிபாடு செய்த பின்னர் வட்டாச்சியர் அலுவலகத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வேட்பு மனு தாக்கல் செய்தார். போடி தொகுதியில் 3வது முறையாக போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடப்படுகிறது. இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பாக வெற்றி வேட்பாளராக போடிநாயக்கனுர் தொகுதியில் போட்டியிடுவதற்கு கழக தலைமை ஆணையிட்டிருந்தது. […]
போடி தொகுதியில் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வத்தை எதிர்த்து திமுக வேட்பாளராக தங்க தமிழ்ச்செல்வன் போட்டியிடுகிறார். திமுக போட்டியிடும் 173 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டார். அதில், போடி தொகுதியில் திமுக சார்பில் தங்க தமிழ்ச்செல்வன் போட்டிடவுள்ளதாக அறிவித்தார். இதற்கு முன் கடந்த 05-ஆம் தேதி அதிமுக சார்பில் வெளியான வேட்பாளர் பட்டியலில் போடி தொகுதியில் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், போடி தொகுதியில் துணை முதலமைச்சர் […]