Tag: boats sank off

#Shocking:அகதிகள் படகு மூழ்கி விபத்து – 13 பேர் பலி!

துனிசியாவில் இரண்டு அகதிகள் படகுகள் மூழ்கியதில் சுமார் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அவ்வாறு இறந்தவர்களில் நான்கு பெண்கள் மற்றும் நான்கு குழந்தைகளும் அடங்குவர்.மேலும் 10 பேர் காணாமல் போனதாகவும்,சிலர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்திய மாதங்களில்,வறுமை காரணமாக துனிசியா மற்றும் லிபியாவிலிருந்து இத்தாலியை நோக்கி மக்கள் படையெடுக்கும் நிலையில் துனிசிய கடற்கரையில் நீரில் மூழ்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.இந்நிலையில்,படகுகள் மூழ்கியதில் சுமார் 13 பேர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

African migrants died 2 Min Read
Default Image